அதிசயமோ அதிசயம்

அம்மா பெற்ற அம்மாவுக்கு
ரவிக்கைச் சட்டை அதிசயம்
ஆத்துக்காரர் தாத்தாவுக்கு
அரைக்கால் டவுசர் அதிசயம்

தீப்பந்த காலத்தில்
மாடவிளக்கு அதிசயம்
திரிவிளக்கு காலத்தில்
அரிக்கேன் விளக்கு அதிசயம்
அப்புறம் வந்த குண்டுபல்பு
அதிசயமோ அதிசயம்

நடந்து போன காலத்தில்
உந்து வண்டி அதிசயம்
உந்துவண்டி ஓடும்போதே
புகைவண்டி அதிசயம்

கட்டைவண்டி காலத்தில்
சைக்கிள் வண்டி அதிசயம்
சைக்கிள் வண்டி ஓடும்போதே
கார் பைக் அதிசயம்

அம்மியரைத்த கைக்கு
மிக்சிஒரு அதிசயம்
ஆட்டுவுரல் இடத்தில்
கிரைண்டர் அதிசயம்

அப்பப்ப நாளை
என் பேரனின்
செவ்வாய் குடியிருப்பு
எனக்கு
அதிசயமோ அதிசயம் !!!

எழுதியவர் : சுசீந்திரன் (16-Aug-13, 8:36 pm)
பார்வை : 54

மேலே