நிஜம்

ஆற்று பெருவெள்ளத்தில்
அடித்துச் சென்றபோது
அக்ரகாரத்து மாமியை
காப்பாற்றினான் அவன்
தீட்டு பட்டதென்று
வீட்டுக்கு வந்ததும்
திரும்ப திரும்ப
குளித்தாள் மாமி
காலண்டரில் புல்லாங்குழல்
ஊதிய கண்ணன்
கண்ணீர் வடித்தான்

எழுதியவர் : சுசீந்திரன் (16-Aug-13, 8:31 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 55

மேலே