எனது ஆருயிர் நண்பனுக்காக.......!!!!

தவம் இருக்க விருப்பம் வந்தால் நான்
தனி இடம் தேட மாட்டேன்..........

உறங்க வைப்பேன் என் நினைவுகளை
உயிர் நண்பனே உன் இதயத்தில்...........!!!

வரம் வாங்கிய பிறகு
தவம் எதற்கு என்கிறாயோ ?

நட்பென்ற வரம் தந்த
நல்ல பெரும் கடவுளே....!!!

அக்கடவுள் என் ஆன்மாவை
அழைத்தால் செல்ல மாட்டேன்....

அன்புள்ள நண்பனே
அடைந்து விட்டேன் சரணாகதி உன்னிடம்.....!!!

வேண்டுமென்றால் அந்த ஆண்டவன்
விரும்பி நம்மோடு நட்பு கொண்டாடட்டும்.....!!!

பாவம் அவனும் சொர்க்கத்தை
பார்த்து மகிழ்ந்து வாழட்டும்......!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (16-Aug-13, 11:52 pm)
பார்வை : 325

மேலே