என் பார்வையில் காதலும் நட்பும்

காதல் மொத்த கவலைகளின் ஏடு
நட்பு நித்த மகிழ்ச்சிகளின் வீடு!
காதல் ஒரு கைம்பெண்
நட்பு ஒரு சுமங்கலி!

காதல் கண்ணீராலானக் கடல்
நட்பு பன்னீராலானக் கடல்!
காதல் தூக்கத்தை தினம் கெடுக்கும்
நட்பு தாலாட்டை தினம் படிக்கும்!

காதல் என்பது மரணப் பயணம்
நட்பு என்பது வாழ்வின் தொடக்கம்!
காதல் என்பது வாய்க்கரிசி
நட்பு என்பது கூட்டாஞ்சோறு!

மொத்தத்தில் காதல்
ஒரு கழித்தல்...
நட்பு ஒரு கூட்டல்...!

எழுதியவர் : muhammadghouse (16-Aug-13, 2:42 pm)
பார்வை : 255

மேலே