விட்டுச்சென்ற மீதங்கள்

விட்டுச்சென்ற மீதங்கள்

தப்பியதாக்கங்களினால்
போகுவழியறியாமல்
இடறிய சொற்களெல்லாமே

இருவல்நொருவல் பொறுக்கல்களாக
அணிவகுத்துப்பிறந்த அகழ்வுவரிகள்

ஏதங்கெட்டவர் மதித்திரைசிலேடைகள்
விழிமறைத்தசூழ்ச்சிகளினாலே

காலாவதிநெருங்கிதொட்ட
கட்டுக்கிடை சிநேகங்களெல்லாம்
துறைபோதல்களினால் நிழலாடுகிறது
இலைமறைகாய் சுவடுகளாக

மரங்கள் பொழிந்த நிழல்களெனநினைந்து
தொடர்ந்தவைகளெல்லாமே
சித்திரைச்சுழியனென்
மென்சீண்டல் கதாபாத்திரங்களே

காற்றுவிடு தூதினிலே
அனுப்பிய ஓலைகளெல்லாம்
சண்டமாருத இரவோலங்கள்
கன்னமிட்டுச்சென்ற காரணத்தினால்

கேளல்கேள்விகளின் முன்னிலைதனிலே
பொய்மைகளென
அறுதியிடப்பட்ட மெய்மைகள்

அண்டப்புரட்டல்களெனச்சொல்லி
அழிவழக்குகள் தொடுத்த
இசைகேடுகளினால்

பனிப்புகார்த் திரைமறைவிலிருக்கும்
சந்திரப் பார்வை
பனிப்பொழிவுகளெல்லாம்

காறுபாறுகளற்று மிளிர்கின்ற
கந்தல் கூளங்களாக

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (17-Aug-13, 7:20 am)
பார்வை : 261

மேலே