வாழ்வை வறுமையாக்கி போனவளே

என்றென்றும் நீயே என் தேவதையே
நீ கொண்ட புன்னகைகள்
இன்று நான்
கொண்ட நகைகளுக்கு
தரம் இழக்க செய்துவிட்டன
உன் இமைகள் தேடும்
உன் கண்களில்
நான் தேடும் ஒளிகள்
இன்று என் கண்களின் புருவங்களில்
நீ தந்த குளியல்கள்
அன்று உன் முகத்தில்
கண்ட ஒளிக்கீற்று
இன்று பாலைவனத்தில்
நான் தேடும் மின்னல் கீற்றுக்கள்
அன்று நான் கண்ட
நீ கொண்ட வாழ்வு
இன்று யார் கொண்ட நாவூரோ
நான் கொண்ட
நான்கு இதய அறைகள்
இன்னும் உனக்காய்
வெறுமையாய் காத்திருக்கும்.