நம்பு தம்பி நம்பு உன்னால் முடியும் .........
கண்ணுக்குத் தூரமாக இருந்தாலும்
நீ என் நெஞ்சுக்குள் இருக்கிறாய்
என் நெஞ்சுக்குள் ஆயிரம்
சுமைகள் இருந்தாலும் ..
நீ அதில் சுகமாய் வாழ்கிறாய் நண்பா....
நன்றி தா.நிஷா மெஹரின்
###############################################
இப்போ தளத்தில் நண்பனுக்காக உருகி உருகி எழுதக்கூடிய ஒரே நபர் தா.நிஷா மேஹரினாகத்தான் இருக்கமுடியும், என் உடன் பிறவா சகோதரனுக்காக / நண்பனுக்காக என்னால் நிஷாவைபோல் எழுத முடியவில்லை என்பதால் அந்த அவரின் படைப்பில் இருந்து ஒரு வரியை அவர் அனுமதி இல்லாமலே எடுத்துக்கொண்டுள்ளேன், நிற்க.
இன்று ஞாயிறு மதியம் 2 மணி அளவில் அந்த தம்பியிடம் இருந்தது அலைபேசி அழைப்பு வந்தது, இரண்டு மாதம் இடைவெளி ஆனதால் கொஞ்சம் நீண்ட நேரம் பேசினார், சொந்த விசயங்களை தாண்டி ஒரு மனிதனுக்கு தொழில் ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் இதைவிட ஒரு கடின நிலை வேறு ஒருவருக்கும் வரக்கூடாது என்று வேண்டுகிறேன் எனவே நல்லிதயம் கொண்டுள்ள எழுத்து நண்பர்களும் அவருடைய பிரச்ச்னைகள் தீரவும் தொழில் ரீதியாக வெற்றி பெற வாழ்த்த வேண்டுகிறேன் ( தயவு செய்து யார் என்று கேட்டு தர்ம சங்கடத்தில் என்னை ஆளாக்க வேண்டாம்)
டேய் நண்பா கவலை படாதே இவ்வளவு தூரம் பயனித்துள்ளாய், எல்லாம் கடந்தது போல் இதுவும் கடந்து போகும் நிச்சயம் உனக்கு வழி பிறக்கும் அதில் நல் வாழ்வும் கிடைக்கும் அதற்கு உண்டான தகுதி, திறமை & உழைப்பு உன்னிடம் இருப்பதால் நிச்சயம் வெற்றி பெறுவாய், நம்பிக்கைதானே வாழ்க்கை, நம்பினார் கெடுவதில்லை
உங்களின் வாழ்த்து நம்மோடு சேர்த்து அவரையும் வாழ வைக்கட்டும்
பின் குறிப்பு: மேல உள்ள தலைப்பு கூட சுமார் 20 வருடங்களுக்கு முன் மதுரை டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் ஒரு வார இதழுக்கு எழுதிய தொடரின் தலைப்புதான்.
நன்றி
மு.ரா.