சும்மா ஒரு லொள்ளு..!
அப்படியா..!
"வாய் கிழிய பேசினான்"
வாய் கிழிந்த பிறகு
எப்படி பேச முடியும்?
ஆ.. என்று சப்தம் மட்டுமே வரும்..!
“கல்லு மாதிரி நிக்காதே”
காலில்லாத கல்லு
எழுந்து எப்படி நிக்கும்..?
"குற்றவாளியை வலை வீசி பிடித்தனர்"
அவன் என்ன நீரிலா
நீந்தி கொண்டு இருந்தான்..?
"அவன் நெய்யை புடைத்தனர்"
அது எப்படி
அவங்களுக்கு மட்டும்
அது இருக்கும் இடம் தெரிந்தது..?
"பல்லை உடைத்து விடுவேன்"
பல்லை உடைக்க முடியாது
புடுங்கத்தான் முடியும்..!
"எங்காவது போயி செத்து தொலை"
அவனால் சாவத்தான் முடியும்
நாம்தான் தொலைக்க வேண்டும்..!
“சும்மா வளவளன்னு பேசாதே”
எதுக்கு கையில் புடிச்சி
தேச்சு பார்கிறீங்க..?
“வாயை மூட்டிட்டு சாப்பிடு”
யாராலையும் முடியாதுங்க..!