நான் அவன் இல்லை!!

பிழைப்பிற்காக கிடைத்ததை பிடித்தது என்று சொல்லி
தன்னை தானே ஏமாற்றி கொள்ளும் கோமாளிகளே!

கோழை தனத்திற்க்கு சாணக்கிய வண்ணம் பூசி
கோமகன் நான் என மார்தட்டும் சிரிப்பு சீமான்களே!

யோசித்து நேசித்து வாழும் மகத்துவம் மறந்து
பேசியே பாசாங்கு காட்டும் உலகமகா பித்துகுளிகளே!

சாதித்து காட்டுதல் என்பதை சாத்தானுக்கு சாமரம் வீசுவதென
புதியதோர் அர்த்தம் கொள்ளும் நவீன அகராதிகளே!

உயிர் பிழைத்திட சேற்று மீனாய் தனிமையில் துடிப்பேனே தவிர
உமது கூவநதி கொசுக்கூட்டதில் தஞ்சம் புகுந்திட மாட்டேன்!!

எழுதியவர் : ஜெகதீஷ் தேவராஜன் (19-Aug-13, 1:43 am)
பார்வை : 87

மேலே