உங்களுக்கு புரியும்..!
என் கையெழுத்து நன்றாக இல்லை என்று ஆசிரியர் அப்பாவிடம் சொல்லி எனக்கு செமத்தியா அடி கிடைத்தது. அடிக்கும் போது கம்பு காலில் பட்டு ரத்தம் வந்து விட்டது. அப்புறம் அப்பா பக்கத்து டாக்டரிடம் அழைத்து சென்றார். டாக்டர் டிடி ஊசி போட்டுவிட்டு ஒரு மருந்தும் எழுதி வாங்கி சாப்பிட சொல்லி அனுப்பி வைத்தார்..!
வீட்டிற்கு வந்த நான் அப்படியே யோசனையில் இருந்தேன். அம்மா அடுத்து வந்து....
"என்னடா மூஞ்சை உம்முன்னு வச்சிட்டு இருக்கே.. என்ன..?"
"அதில்லம்மா இங்க பாரு அப்பா என் கையெழுத்து சரியில்லேன்னு இந்த அடி அடிச்சாரு. இந்த டாக்டருக்க கையெழுத்தை பாரு.. இதைவிடவா என் கையெழுத்து மோசம்.."?
அவ்வளவுதான்..அடுத்த அடி அம்மா கையில் இருந்து கிடைத்தது..!
சரி அதைவிடுங்க..!
நான் கையெழுத்து மோசமா எழுதினேன் அப்பாஅடிசாரு.. அதில ஒரு நியாயம் இருக்கு..! டாக்டரு கையெழுத்து மோசமா எழுதுனதுக்கு அம்மா எதுக்கு என்னை அடிச்சாங்க.?
அதுதான் எனக்கு இன்னும் புரியல்லே..?
-------------------------
குமரி பையன்