கீதை வெண்பா அத்தியாயம் 5 சந்நியாச யோகம் 5 பா 21 22 23 24 25

கீதை வெண்பா அத்தியாயம் 5 சந்நியாச யோகம் 5 பா 21 22 23 24 25

21.
புறப்பொருளில் நாட்டம் இலாத மனத்தான்
அறவழியில் ஆத்ம சுகத்தைப் பெறுவான்
பிரம்ம சமாதி தனிலே அழியா
பிரம்ம சுகம்பெறு வான்

22..
புலன்வழிப் போகங்கள் துன்பத்தின் ஏது
நிலையில்லா போகம் முதல்முடிவு உள்ளவை
குந்தியின் மைந்தனே கற்றபெரு ஞானியின்
சிந்தையதில் இன்புறாத டா

23.
வேகம் தணிப்பவன் காமக் குரோதத்தின்
தேகத்தை விட்டு உயிருமே செல்லுங்கால்
வல்லான் அவனேநல் யோகியின்பம் துய்த்திடும்
நல்லோன்என் பானவனே யாம்

24.
ஆத்மா வினில்சுகித்து ஆத்மா தனிலாடி
ஆத்மசோதி தன்உள் ளொளியினைக் கண்டுதானே
ஆத்மநிர்வா ணம்பெறு வான்

25.
அகற்றிவெம் பாவத்தை பின்அகற்றி ஐயம்
அகத்தி லடங்கா புலன்கள் அடக்கி
அனைத்துயிரும் இன்புற்று வாழ உதவும்
முனிவனவன் முத்திபெறு வான்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Nov-24, 6:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 20

மேலே