முட்டாள் திருடிய கடிதம்!....
மகன் வயது 23:
கவிதை திருடியவன்:மகன்
திருடப்பட்டது: தந்தையிடம்
திருடியாதால் வெட்கப்படுவது????
காலமும்,கடவுளும்!....
திருடியதால் வந்த விளைவு????
ஆனந்த கண்ணீர் !.....
விளக்கம்:
என் தந்தை மது பழக்கத்திற்கு அடிமையானவர்!...
பல ஆண்டுகளாக அவர் குடும்பத்தை சரியான முறையில் பார்த்துக்கொள்ளவில்லை...
கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தை பார்த்துக்கொள்கிறார்...உழைக்கத்தொடங்கினார்
முன்னேற துடிக்கிறார்!...
முன்பெல்லாம் அவர் குடித்ததால் அவர் உடல் நலத்தை நினைத்து வருந்தினாலும் வீட்டிற்கு பணம் தரவில்லையே என்ற வெறுப்பு இருக்கும்!...
ஆனால்!இப்போது சொல்லாமலே அனைத்தையும் செய்கிறார்!..இப்போதும் குடிக்கிக்றார்!...
இந்த சூழ்நிலையில் என் தாய் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!...
இந்த சூழலில் என் தந்தையும் நானும் பணத்திற்கு அலைகிறோம்
அவர் நம்மிடம் பணம் இல்லையே என்று மிகவும் வருந்துகிறார்!...
அன்று இரவு வீட்டில்!...(நானும் தந்தை மட்டும்)
வீட்டிற்கு வந்ததும் அவர் உள்ளே சென்று எனக்கு தெரியாமல் மது அருந்தினார்!...எனக்கு கோபம் உடனே தூக்கம் வருகிறது என்று சொல்லிவிட்டு பக்கத்துக்கு அறைக்கு சென்று விடேன்....தந்தை உறங்கிவிட்டார்!...
நிசப்தமான இரவு நான் அமர்ந்திருக்கும் மேசையின் மேல் ஒரு நாளேடு(Diary) இருக்கிறது அதை திறந்து பார்த்தேன்!..
முதல் பக்கதில்!
அடுத்தவர் Diaryயை படிப்பவன் முட்டாள் என்று இருந்தது தந்தையின் கையெழுத்தில்....!
வேகமாக அடுத்தடுத்து பக்கத்தை புரட்ட!...
நான் என்மனைவிக்கு பொறுப்பான கணவனாக வாழவில்லை!, என் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாகவும் இல்லை!...
மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் துரோகம் செய்து விட்டேன்!...
இதை படித்ததும் !.........
வார்த்தைகள் இல்லை என்னிடம்!...
அப்போது தான் புரிந்து கொண்டேன் முன்பிருந்தே என் தந்தை நல்லவர் தான்!...
மது தான் குற்றவாளி என்று!...
உங்கள் வீட்டிலும் இந்த குற்றவாளி இருந்தால் உடனடியாக அவனை விட்டு விடுங்கள்!....
அவன் உங்களுக்கு தெரியாமல் உங்களை சுற்றி இருப்பவரகளையும் பழிவாங்குகிறான்!...
ஒரு பேருந்தின் பின்னே எழுதியிருந்தது::::
அப்பா இன்னைக்காச்சு வீட்டுக்கு குடிக்காம வாங்க!...
நானும் அதையே சொல்கிறேன் நீங்கள் இன்று குடிக்காமல் வீடு திரும்பிப்பாருங்கள்...
உங்கள் பிள்ளைகளுக்கு இன்று தான் தீபாவளி!....
பலவருடங்கள் கழித்து திரும்பிப்பார்த்தால்,
உங்களிடம் காலம் இருக்காது,
இல்லை!...நீங்கள் நிற்கும் கடை வரிசையில் உங்கள் மகனும் நிற்கலாம்??????????????????????????