அனைவரும் அறியவேண்டிய உணவுப் பழக்கம்

உணவு உண்ணும் பழக்கத்தில், ஒரு பொதுவான​ மற்றும் எளிய ஆனால் நினைவில் கொள்ள ஒரு சிறந்த கொள்கை உண்டு. அது

ஒரு அரசன் போல காலை உணவு சாப்பிட வேண்டும்
ஒரு இளவரசனை போல மதிய உணவு ​சாப்பிட வேண்டும்
ஒரு ஏழை ​போல ​இரவு உணவு உண்ண வேண்டும்.​

அதாவது,

காலை உணவானது, எந்த ஒரு விதிவிலக்குகளும் இல்லாத, ஒரு முழு சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதன் மூலம் தொடங்கி,

பின்னர்

உங்கள் வளர்சிதை மாற்றம் படிப்படியாக வேலை செய்ய தொடர்ந்து உதவும், குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட மற்றும் இலகுவான செரிமான உள்ள உணவுகளை மதிய உணவில் உட்கொள்ளவேண்டும்,

பின்னர்

இரவு முழுவதும் நன்கு தூங்கவும், நீங்கள் உறங்கும்போது கூட உங்கள் உடல் தொடர்ந்து வேலை செய்ய ஏதுவாகவும், மேலும் மறுநாள் காலைக்கு உங்களை தயார்படுத்தவும், இரவு உணவை அரை வயிறாக எடுத்துக்கொள்வது மிக நல்லது.

(எங்கோ படித்தது)

எழுதியவர் : காரைக்குடி ச சரவணன் (24-Aug-13, 3:06 pm)
சேர்த்தது : டிஜிட்டல் சரவணன்
பார்வை : 215

மேலே