நன்றி!

என்னை விதைத்த தந்தையே
தன்னைப்போல் செதுக்கினார்.
மண்ணைப் போற்ற என்னையே
கண்ணைப் போன்று போற்றினார்.

பாரதியின் நூற்றாண்டில்
பாவை நான் தோன்றினேன்.
பாரதியின் பெயரைத்தான்
பார்த்திட்டார் என் தகப்பன்.

தாமோதரன் என் கணவர்
தரணி ஆள ஒரு பிள்ளை
சேமமுற நாட்டிற்காய்
சீருறத் தந்தார் வாழி

நான் நினைத்த உயரம்தான்
நானும் எட்டும் போதுதான்
வென்றிடத் துணையார்க்கு
நன்றியெனச் சொல்லுவேன்.

ஜெயதாமு

எழுதியவர் : ஜெயதாமு (24-Aug-13, 3:12 pm)
பார்வை : 116

மேலே