கலங்காதே என் ஈழத்தாயே!!!

கலங்காதே என் ஈழத்தாயே!
போர்களம் என்பது புதியது அல்லடி உமக்கு

ஈழமே நீ எங்கள் தமிழரின் தாய்
உன்னை என்றும் மாற்றானிடம்
இழக்க மாட்டோம்

உன்னை மீட்கவே ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளாக போரிட்டு மடிந்து
வெற்றிக்கொடியை நாட்டினோம்
உன்னில்

நீ என்று எங்களை பிறிந்தாய்
அல்லது நாங்கள் தான் உன்னை
பிறிந்தோ பிறித்தோ இருக்கிறோமா

என் ஈழத்தாயே கலங்காதே
நீ எங்கள் கலைமகளடி

எல்லாளன் காலம் வரை பெளர்ணமியாய் ஒளிர்ந்தாய்
சிங்களவனால் அம்மாவாசையாய் தேய்ந்தாய்
ஆனால் நாங்கள் உன்னை அப்படியா
தேயவிட்டோம் மீண்டும் 1000 ஆண்டுகளுக்குப்
பின் 985-யில் முடிச்சுடிய ராசராச சோழனால்
நீ மீண்டும் பெளர்ணமியாய் ஒளிர்ந்தாயே

ஆனால் மீண்டும் சிங்களவன் உன்னை அம்மாவசையாக்க
முயன்றதன் முடிவில் தானே 1985 முதல் எம் தலைவர் மேதகு. பிரபாகரனால்
நீ மீண்டும் பெளர்ணமியாய் ஒளிர்ந்தாய்

பிள்ளைப் பருவத்தில் எங்கள் தாய் எங்களுக்கு நிலாச் சோறு
ஊட்டி வளர்த்தாலே அந்த நிலாவே நீ தானே
பாரடா மகனே இந்த நிலாவைப் போல்
நம் ஈழம் வளர்ந்தும் தேய்ந்துமிருக்குதடா
என்றாவது ஒரு நாள் நம் ஈழம் மீண்டும் முழுமையடைந்த
பெளர்ணமி நிலவாய் ஒளிரச்செய்ய வேண்டுமடா என்றே
அந்த நிலாவாக உன்னை (ஈழத்தை) காண்பித்தாலே

மீண்டும் கலங்காதே என் ஈழத்தாயே
நீ இன்றி தமிழினம் இல்லை
தமிழினமின்றி நீ இல்லை
என்றோ ஒரு நாள் நாங்கள்
உன்னை மீட்டு பெளர்ணமி நிலவாய் ஒளிரச் செய்வோம்

இன்றைய உன் கண்ணீரை சேமித்து வை
நாளை உன்னை மீட்டப்பின் ஆனந்த கண்ணீருக்கு வேண்டும் அல்லவா,,,

மீண்டும் கலங்காதே என் ஈழத்தாயே
நீ எங்கள் கலைமகளடி
நீயே கலையிழந்தால் நாங்கள் என்னடிச் செய்வோம்
கலங்காதே நாங்கள் மீண்டும் எழுவோமடி
உனக்காக!!!

=== க.பிரபு தமிழன்

எழுதியவர் : க.பிரபு தமிழன் (24-Aug-13, 5:23 pm)
பார்வை : 99

மேலே