தொலைக்காட்சி பேசுகிறேன்

*தொலைக்காட்சி*
*ஒரு தொல்லைக் காட்சியா....?*





📺📺📺📺📺📺📺📺📺📺📺

*தொலைக்காட்சி*
*பேசுகிறேன்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

📺📺📺📺📺📺📺📺📺📺📺

"தொலைக்காட்சி"யாக
இருந்த நான்
உங்களுக்கு
இப்போது
"தொல்லைக்காட்சி"யாக
இருப்பதாகப் புலம்புகின்றீர்கள்...!

அன்று
ஒன்றே ஒன்று
'பொதிகை' அலைவரிசை மட்டும்
இருந்ததால்
நான் உங்களுக்கு
"தென்றலாக" இருந்தேன்........!!
இன்று
கடல் அலைகளைப் போல்
அலைவரிசை மாறியதால்
நான் "புயலாக" இருக்கிறேன்....
'அளவுக்கு மீறினால்
அமுதமும் நஞ்சு' என்பதை
நீங்கள் அறியாதவர்களோ...?

என்னுடைய அளவை
சுருக்கத் தெரிந்த
உங்கள் அறிவுக்கு
என்னைப் பயன்படுத்தும
அளவு மட்டும்
எப்படி தெரியாமல் போனதோ..?
"வேலைச் செய்ய தெரியாதவன்
கருவி மேல்
கோபப்பட்டானாம்" என்ற
பழமொழி உங்களுக்கு
சரியாக பொருந்துகிறது...

எனக்கு
தொலைக்காட்சி என்று
பெயர் வைத்ததே
உங்களால் சென்று
பார்க்க முடியாத
தொலைவில் உள்ள
அரிய காட்சிகளை
உங்கள் வீட்டுக்குள்ளேயே !
கொண்டுவந்து
காட்டுவதால் தான்.....
என் மீதும் குற்றம் சொல்ல
உங்களுக்கு
எப்படி மனம் வந்தது.....?

அறிவியல்
'ஆக்கத்திற்கா
அழிவிற்கா'என்று
பட்டிமன்ற
வைக்கும்போதெல்லாம்
'ஆக்கத்திற்கே' என்று
தீர்ப்பு சொல்லுகிறீர்கள்...
நான்
அறியாமையா ?
அறிவியலா ?

ஆணும் பெண்ணும்
இணைந்தது மட்டுமல்ல
நன்மையும் தீமையும்
சேர்ந்ததுதான் பூமி.....
நன்மை தீமைகள் அறிந்து
வாழ்வதற்கு தான்
மனிதனுக்கு
ஆண்டவன்
பகுத்தறிவை கொடுத்தான்.....
"அறிவியலின்" மீது
குற்றம் சொல்வதை
விட்டுவிட்டு
உங்கள் "அறிவின்" மீது
சொல்லுங்கள்......!

ஏனெனில்
உங்கள் அறிவை இயக்குவதற்கு
எங்களிடம் ஏதும் இல்லை
ஆனால்
எங்களை இயக்க
உங்கள் கைகளில்
ரிமோட் இருக்கிறது அல்லவா....!!!

அளவுக்கு அதிகமாக
பார்த்தால் தான்
கண் போகும்
அளவோடு பாருங்கள்
அறியாமை போகும்....

எங்களிடம்
பொழுதையே ! போக்க
பார்க்காதீர்கள் நேரம் வீணாகும்.... பொழுது போக்காக
பாருங்கள் நேரம் பொன்னாகும்.....

*கவிதை ரசிகன்*

📺📺📺📺📺📺📺📺📺📺📺

எழுதியவர் : கவிதை ரசிகன் (10-Jun-24, 6:59 pm)
பார்வை : 26

மேலே