வாழ்வழகு

சிரித்தாள் முகம் அழகு.
சிந்தித்தால் மனம் அழகு.
புரிந்தால் கருத்தழகு.
பொறுத்தால் நலமழகு
கோர்த்தால் கவியழகு.
கொடுத்தால் கையழகு.
பார்த்தால் விழியழகு.
படித்தால் அறிவழகு.
வார்த்தால் வடிவழகு.
வளர்ந்தால் சிறப்பழகு..
சேர்ந்தால் நாடழகு.
செழித்தால் காடழகு.
பசலையானால் நிலமழகு.
பயிரானால் களமழகு.
உயர்ந்தால் மலையழகு.
ஓடினால் முகிலழகு.
பெய்தால் காரழகு.
பாய்ந்தால் ஆறழகு.
எழுந்தால் கதிரழகு.
விழுந்தால் இரவழகு.
ஒளிர்ந்தால் நிலவழகு.
மிளிர்ந்தாள் மீனழகு.
வளைந்தால் வில்லழகு.
வரைந்தால் வானழகு.
பூத்தால் பூவழகு.
போகித்தால் வண்டழகு.
தேர்ந்தால் தெளிவழகு.
தெளிந்தால் நீரழகு.
அலைந்தால் கடலழகு.
அசைந்தால் காற்றழகு.
இசைந்தால் இசையழகு.
இனித்தால் கனியழகு.
கனிந்தால் காதலழகு.
கலந்தால் மனையழகு.
குழந்தைகள் குடும்பழகு.
குடும்பம்தான் வாழ்வழகு.

ஜெயதாமு.


.

எழுதியவர் : ஜெயதாமு (25-Aug-13, 10:40 pm)
பார்வை : 115

மேலே