அமெரிக்க டாலர்..!

அய்யர்கடை தோசையோடு
அரைத்துதரும் சட்டினியும்
நல்ல சம்பா அரிபுட்டும்
நாயர்கடை ரசவடையும்
அசத்தும் அந்த வாசனை
ஆம்பூர் பாய் பிரியாணி
ஆயா அவள் தருவாளே
ஆசை பஜ்ஜி சுக்கு நீரும்
அந்திவேளை நண்பனோடு
அருகிருந்து அருந்திய நான்
அத்தனையும் இழந்துவிட்டு
அம்பர்கர் சாண்டுவிச்சும்
அதே கேஎப்சி சிக்கனோடு
அடைத்த பெப்சிகோலா குடித்து
அமெரிக்கா வீதிகளில்
அரைடவுசரில் நடக்கின்றேன்..!

பை நிறைய பணமிருக்கு
மெய் நிறைய மனமிருக்கு
வயிற்றுக்குள்ளே பசியிருக்கு
வாய்க்கு ருசி இல்லையே
வேலையிலே நேர் இருக்கு
மாலையிலே பார் இருக்கு
காலையிலே போர் அகற்ற
நாலு பேரு இல்லையே
யாருக்கும் கூச்சமில்லை
எங்குமே மோசமில்லை
எவருமே வேசமில்லை
நிச பாசமட்டுமில்லையே
நான் படிச்ச படிப்புக்கு
டாலர் கொட்டி குவியுதே- என்
நல்லகால நினைவுகள்
நாட்டுக்கென்னை இழுக்குதே..!

எழுதியவர் : குமரி பையன் (25-Aug-13, 10:00 pm)
பார்வை : 92

மேலே