பெண்ணுரிமை !...

இப்போது பரவலாக பரவிவரும் ஒரு கொடிய நோய்!!....
ஆண் பெரிதா?பெண் பெரிதா?

இதற்கு இந்த சமுதாயம் வைத்திருக்கும் பெயர்
சமஉரிமை,பெண்ணுரிமை,இப்படி பல??????????

(இதில் நம்பிக்கை உள்ள ஆண்,பெண்)
உங்களிடம் ஒன்று கேட்கிறேன்:
நீங்கள் அனைவரும் மனிதன் என்ற ஒருவனை எந்த அடிப்படையில் ஆண் பெண் என்று பிரிக்கிறீர்கள்...

உடலாலா? இல்லை மனம்கொண்டவள் என்பதாலா?

உடலால் என்றால்!...
அந்தப்பட்டியலில் ஏன் இன்னும் மாற்றுத்திரனாளிகள் சேர்க்கப்படவில்லை,
அவர்களும் உடலால் மாறுபட்டவர்கள் தானே???

மனதினால் என்றால்
அந்தப்பட்டியலில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை????

மனிதன் என்பவன் ஆண் பெண் என்ற இரு பிரிவைமட்டும் கொண்டவனா?

என்னை(நம்மை)பொறுத்தவரையில் ஆண் பெண் என்றெல்லாம் கிடையாது!...

மனிதன் என்பவன் சமமானவன்...
அனைவரும் சமம்!...
இதில் பாதிக்கப்பட்டவர் ஒரு பக்கம்!..
அதற்க்கு போராடுபவர் மறுபக்கம்!...
இரண்டிலும் இருபாலாரும் இருக்கிறார்கள்!....

எனவே!...
யார் தவறு செய்தாலும் அதை தவறு என்று பாருங்கள்
இது பெண் செய்தது,இது ஆண் செய்தது என்று மடமையில் மூழ்காதிர்கள் !..

தவறு யார் செய்தாலும் தண்டனை கிடைக்கவேண்டும்!

ஒரு கொடுமை பெண்ணிற்கு நிகழ்ந்ததால்????
நாம் போராடும் போராட்டம் தவறிழைத்தவனுக்கு தக்க தண்டனை வாங்கித்தருவதற்காக இருக்க வேண்டும்!...

மாறாக,இந்த கொடுமை பெண்ணிற்கு நிகழ்ந்துவிட்டது
இது பெண் உரிமைக்கு எதிரான செயல் என்று திசை மாறி போக வேண்டாம்....

பெண் சுதந்திரம் கேட்டு போராடும் பெண்ணே!...
உனக்கு பின்னால் தந்தையோ, கணவனோ இல்லை உறவினராகவோ ஒரு ஆண் இருப்பான்!...
எனவே சுதந்திரம் உன்னிடம் தான் உள்ளது!...
உரிமைகேட்டு போராடாதே!...
உண்மையை கேட்டு நியாயத்திக்கு போராடு!
வெற்றி உனக்கே!....

எழுதியவர் : உங்களுக்காக (26-Aug-13, 9:52 am)
பார்வை : 1974

மேலே