கவிதைச் சரம்

கவிதைச் சரம் தொடுக்க
அரிச்சுவடி
எடுத்து வந்து
அகரமெல்லாம் தொலைத்துவிட்ட
இலக்கியப்
பிச்சைக் காரனாய் இன்று
சகத்தினை அழிக்கக் கண்டும்
சத்தியங்கள் சிதறக்
கேட்டும்
இடது கையால் இறைவன்
கிறுக்கி விட்ட தலையெழுத்தை
மறந்துவிட
நாம் மரங்கள் அல்லவே
உள்ளமே உலையில் வேகக் கண்டும்
ஊரெல்லாம்
உழுத்துப் போகக்
கண்டும் நான் மட்டும்
வெளிநாட்டில் வாழ நான்
என்ன
வெள்ளைக் காரனுக்கு
வெள்ளாவி வைப்பவனா?
முல்லைக்கேசன்