ன் மனதை பாதித்த ஒரு சம்பவம் !!

சென்னை - அண்ணா நகரில் நேற்று என் மனதை பாதித்த ஒரு சம்பவம் !!

நேற்று மதியம் 2.30 மணி ......நான் என் நண்பனை பார்த்தவிட்டு அண்ணா நகரில் என்னுடைய அறைக்கு சென்றுகொண்டு இருந்தேன் ..ஒரு 72 வயது மதிக்கதக்க முதியவர் குப்பை தொட்டியில் இருந்த பழைய கெட்டுபோன உணவை சாப்பிட்டுகொண்டு இருந்தார் !!!!.

அதைபார்த்த உடன் எனக்கு மனசு தூக்கி வாரி போட்டுவிட்டது ...உடனே அந்த பெரியவரின் கையை பிடித்து இழுத்து ஐயா என்ன பண்றிங்க !!! வாங்க நான் சாப்பாடு வாங்கித்தரேன் ...வேணாம் ராசா !! எனக்கு இது போதும் ..நான் மட்டுமா இத சாபுடுதேன் !!!(அப்போது அவரை சுற்றி சுற்றி 3 நாய்கள் பாசமாக )... ...

தாத்தா உங்க ஊரு பேரு ..இங்க எபடிவந்திங்க ..family ??..எனக்கு சேலம் தம்பி ..பசங்க 2 பேரு ஒருத்தேன் lawer ...இன்னொருதேன் ஹோட்டெல் management ..என் பொன்சாதி இறந்து 1.5 வருஷம் ஆகுது ..பசங்க என் பொன்சாதி இறந்த பிறகு கவனிகிறது இல்ல தம்பி......தாத்தா கவலை படாதிங்க நான் டெய்லி உங்களுக்கு சாப்பாடு கொண்டுவறேன் பக்கத்துலதான் எனக்கு ரூம் ....வேண்டாம் ராசா ...நீ சொன்னதே போதும் ராசா !!! எனக்கு என்னபா கவலை .தினமும் rs . 65 சம்பாதிக்கிறேன் ரோட்டுல கெடக்குற குப்பை ,பிளாஸடிக்க பொறுக்கி !!! எனக்கு மாரியாத்தா துணை இருக்கா ..வேற என்ன வேணும் ?,,,,....

தம்பி உன் பேரு என்ன ராசா ..ரத்னம் தாத்தா,,,அட என் பேரப்புள்ள பேரும் ரத்னம் தா..ன் ரத்ன பாண்டியன்....தாத்தா கவலை படாதிங்க தாத்தா உங்கள முதியோர் இல்லத்துல சேத்து உடுறேன் வாங்க ..வேண்டாம் ராசா..என்று அவர் பழைய குப்பையில் பிளாஸ்டிக் பொறுக்கும் வேலையில் கவனம் செலுத்தினார் ...

அருகில் இருந்த டி கடை காரரிடம் அந்த பெரியவரை பற்றி விசாரித்தேன் ...அவரு யாருன்னு தெரியாது பா, ஆனா டெய்லி காலை 6 am வந்து குப்பை தொட்டியில் உள்ள உணவை நாய் ,,காக்க ,,குருவிக்கு போடுவாரு!!!!!! மத்தபடி ஏதும் தெரியாது ...என்ன உலகம் பாசமா பேற்று வளர்த்த பசங்க சாப்பாடு கொடுக்கம அப்பாவை (அந்த பெரியவரை ) நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள் !!

ஆனால் அந்த பெரியவரை நம்பி சென்னை - அண்ணா நகரில் 40 க்கு மேற்பட்ட நாய்கள், 100 கணக்கான வாய் இல்லாத ஜிவன் உயிர் வாழ்கிறது ....சென்னையில் இதுபோல பல விஷயம் தினமும் நடக்கிறது ..

எழுதியவர் : (26-Aug-13, 11:47 am)
பார்வை : 140

மேலே