வேண்டும்!

ஏரியெல்லாம் நீரினாலே நிரம்ப வேண்டும்!
ஏரி நிலத்தில் கட்டிடம் கட்டுவதை நிறுத்த வேண்டும்!

கரை ஓரங்களில் மரங்கள் ஓங்கி வளர்க்க வேண்டும்!
வளர்ந்த மரத்தை வெட்டுவதை தவிர்க்க வேண்டும்!

காக்கைக்குருவி வானிலே சுதந்திரத்துடன் பறக்க வேண்டும்!
பறக்க தடுக்கும் தடைகளையெல்லாம் தகரக்க வேண்டும்!

மாசுயில்லா காற்றை நாமும் சுவாசிக்க வேண்டும்!
மாசுப்படுத்தும் வாகனங்களை நாமும் குறைக்க வேண்டும்!

இயற்ககையை அனைவரும் மதிக்க வேண்டும்!
இயற்கையை அழிக்கும் செயற்கையை நாம் அழிக்க வேண்டும்!

எழுதியவர் : ஔவைதாசன் (26-Aug-13, 12:20 pm)
சேர்த்தது : ஔவ்வைதாசன்
பார்வை : 102

மேலே