ஔவ்வைதாசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஔவ்வைதாசன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  28-Apr-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Aug-2013
பார்த்தவர்கள்:  437
புள்ளி:  47

என்னைப் பற்றி...

மன்னிக்கவும் என்னைப் பற்றி எனக்கு சொல்ல தெரியல!

என் படைப்புகள்
ஔவ்வைதாசன் செய்திகள்
ஔவ்வைதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2014 12:34 pm

தடித்த அலகு அழகு - பழுப்பு
நிற உடல் அழகு - கரிய
அடிப்பகுதியும் வெண் நிற கன்ன அழகு
இணை யாகவோ கூட்டமாகவோ திறந்த
வயல்வெளிகளில் நீ காணப்படுவதும் அழகு
மண்ணின் நிறத்திலேயே இருப்பதால் – உன்னை
கண்டுபிடிப்பது சற்றே கடினம் - என்றாலும்
இறக் கைகளை அடித்தபடி நடுங்கும்
இயக்கத்துடன் சட்டென விண்ணை நோக்கிஎழும்பி
உயர்வானில் நீபாடிக்கொண்டே இருப்பாய் – நான்
இசைவானில் உன்னை தேடிக்கொண்டே இருப்பேன்
பின்பு இறக்கைகளைப் பக்கவாட்டில் குறுக்கி
திடுமென கீழ் நோக்கி வீழ்ந்து
மீண்டும் வீழ்ந்த வேகத்திலேயே
மேல் நோக்கி எழுந்து - மீண்டும்
பாடிக் கொண்டே கலிநடனம் தந்தாயே!!

மேலும்

அழகு .......வானம் பாடியின் வாழ்வை பாடியது...... 07-Jul-2014 1:05 pm
மண்ணிலிருந்து வானுக்கும் ,வானிலிருந்து பூமிக்கும் சிறகு விரித்துப் பாயும் பறவையின் இயக்கத்தை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ஔவை தாசன் . கலி நடம் ----ள கரம் தேவை. களி நடம் புரியக் கண்டேன். ----கம்பனின் சொல் ஆட்சி. ----அன்புடன், கவின் சாரலன் 06-Jul-2014 2:04 pm
வரி ஒவ்வொன்றும் 4 சொற்கள் அமைய வேண்டுமே தோழா 06-Jul-2014 1:33 pm
அருமை 06-Jul-2014 1:04 pm
ஔவ்வைதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2014 3:47 am


என்பது
செயலின் தொடக்கம்

வெற்றியின் உ
உற்ச்சாகம், உழைப்பு, உயர்வு.

பலத்தின் உ
உணவு, உடல், உள்ளம்.

நம்பிக்கையின் உ
உறுதி, உண்மை, உதவி

உ வின் முடிவு என்பது
வெற்றி! பலம்! நம்பிக்கை!

மேலும்

அருமை நட்பே 23-Jun-2014 9:07 am
அருமை 23-Jun-2014 8:40 am
மிகவும் அருமையான விளக்கம் உ விற்கு . நன்றி 23-Jun-2014 7:24 am
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) athinada மற்றும் 16 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Feb-2014 3:27 am

நன்றி : திரு ஹாசிப்கான்(ஒவியம்)
-------------------ஆனந்த விகடன்


~~~அலைபேசியில் சீரழியும் இளம் சிறார்கள்~~~

அரும்புகளின் கையில்
அலைபேசி எந்திரம்.
அலைபேசியால் தினம்
அலைப்பாய்கிறது மனம்.

விலையில்லா நாட்டின் மானம்
விலைப்போகிறது அவமானம்.!

அலைப்பேசி விற்பனை மையங்களில்
அலைமோதுகிறது மாணவ செல்வங்கள்.!
அற்பகாசுக்கு பதிவேற்றப்படுகிறது ஆபாசங்கள் !

புற்றீசல்களாய் நீலப்படங்கள்
கிளுகிளுப்பாய் நிழற்படங்கள்-அத்தனையும்
பாலுணர்வுக்கு முதலீடுகள்.

உடலுறவு காட்சிகள் யாவும்
அலைபேசியில் உலாவும் கேளிக்கை
பள்ளியறை காட்சி நினைவுகளால்
பாடசாலைகளில் முதலிரவு ஒத்திகை.

இளம் சிறார்களின் பா

மேலும்

மிக்க நன்றி ஐயா..! பதிவு செய்கிறேன் ஐயா.,,. 21-Dec-2014 1:57 pm
மிக்க நன்றி மா..! 21-Dec-2014 1:57 pm
உண்மை கூறும் உயிரோட்டமான படைப்பு ... மிக மிக அருமை ... இன்றைய இளம் சிறார்கள் இதனை அறிந்து கொள்ளட்டும் , அருமை.... 20-Dec-2014 5:58 pm
நல்ல கவிதை - பயப்படாத நேரடித்தாக்கு.... கற்றம் புரிந்தவர் நெஞ்சம் திடுக்குறும்.... மேலும் ஒன்றி இரண்டு பிள்ளைகளையும் கண்ணில் வைத்து பாது காக்காதவர்க்கு எப்படிச் சொல்வது? (நான் தளத்தில் சேருவதற்கு ஆறு மாதத்திற்கு முன் வந்தது...நல்லன வற்றை மறு பதிவு செய்யவும்) 20-Dec-2014 11:28 am
SHABINAA அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Jan-2014 3:27 pm

சகோதரர் மலர்1991 அவர்கள் நல்ல ஒரு விண்ணப்பத்தை கேள்வி பதில்பகுதியில் முன் வைத்தார்கள். பலர் மழுப்பலாக பதில் சொன்னாலும் யாரும் உண்மையை மனம் திறத்து சொல்ல முன்வரவில்லை. அதனால் நானே இதை இங்கு மீள் பதிவு செய்கிறேன்.

இது சம்பந்தமாக சில விஷயங்களை இங்கு நான் முன் வைக்க விரும்புகிறேன்.அவைகளை வைத்து தமிழுக்கோ தமிழர்களுக்கோ நான் எதிரி என நீங்கள் முடிவு கட்டிவிடக் கூடாது.

ஒரு கலாச்சார விழா நமது நாட்டில் தொடர்ந்து நடை பெற்று வருகிறது என்ற காரணத்திற்காக அதைச் செய்யும்படி எவரையும் வற்புறுத்த முடியாது. பொங்கல் விழாவை பொறுத்தமட்டில், தானியம் விழைந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக அவ்விழா கொண்டாட

மேலும்

அன்பான தமிழர்களே! நாம் பிறந்ததும் அன்னையிடம் தாய்ப்பால் அருந்துகிறோம்.பிறகு காலம் முழுதும் பசுவின் பாலை அருந்திதான் வளர்கிறோம். அங்ஙனம் நமக்கு நித்தம் ரத்தத்தைத் திரித்து பால் கொடுக்கும் நம் அன்னையை ஒத்த பசுவை வாழ்த்துவது நன்றிக்காக மட்டுமல்ல அது நம் நாகரிகத்து உணர்த்தும் வழக்கமாகும். மேலும் இந்து அல்லாதவர்கள் இப்படி பழந்தமிழரின் பழக்கங்களை மதத்திற்காக நிராகரித்தால் தமிழின் எதிர்காலம் என்ன?தமிழில் தங்கள் மதமங்களை எழுதிய உமறுபுலவர்,ஜி.யு.போப்,வீரமாமுனிவர் போன்றவர்களில்லையா shabinaa? 28-Feb-2014 11:41 am
க்ருதை = கருத்தை என்று வாசிக்கவும் 11-Feb-2014 7:28 pm
தமிழ் புத்தாண்டு பற்றி 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மிகச்சிறந்த தமிழ் அறிஞர் குழுவின் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தை தமிழ் புத்தாண்டின் தொடக்கம் என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழ்ர் திருநாள் அவரவர் விரும்பிய வண்ணம் கொண்டாடலாம். இது மதம் சம்பந்தப்பட்ட விழா அல்ல. பொங்கலைத் தான் தமிழ் உணர்வுள்ளவர்கள் தமிழர் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். நான் மதத்திற்கு அப்பாற்பட்டே நட்புக் கொள்கிறேன். எனக்கும் பல நல்ல இசுலாமிய நண்பர்கள் உள்ளார்கள். உங்கள் க்ருதை நான் மதிக்கிறேன். மதத்திற்கும் மதவழி பாட்டிற்கும் இறைவன் என்று சொல்வதற்குக் கூட மொழி மிக அவசியம். என்னைப் பொருத்தவரை மொழியின் மூலந்தான் இறையுணர்வு கொள்ளமுடியும். அந்த எண்ணத்தில் தான் த்மிழ் திருநாள் பற்றி வேறுவிதமாகக் கேள்வி எழுப்பினேன். உங்கள் கருத்தைப் ப்கிர்ந்தமைக்கு மிகுந்த நன்றி தோழமையே. 11-Feb-2014 7:19 pm
நண்பரே..நான் பதித்ததும் விளக்கமே அன்றி வேறு இல்லை.! மோதல் எண்ணம் சிறிதும் இல்லை. 11-Feb-2014 2:32 pm
ஔவ்வைதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2014 11:19 am

உலக தமிழர்களிடத்தில் ஒற்றுமை
நிலவவில்லை என்பதுதான்
நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய
நிதர்சனமான ஒரு கசப்பு உண்மை.

சாதி தமிழரை இழிக்கிறது,
மதம் தமிழரை சரிக்கிறது,
கட்சி தமிழரை பிரிக்கிறது.
எத்தனைப் பிரிவுகள்!
எத்தனைச் சரிவுகள்!
எத்தனை இழிவுகள்!....
எத்தனை வேற்றுமைகள்!...
நம் தமிழர்களிடத்தில்!

தானே தலைவன்! தானே தொண்டன்!
வீட்டுக்கோர் சங்கம்! என்பது
தமிழர் ஒற்றுமைக்கு ஏற்படும் பங்கம்!
சேர சோழ பாண்டியர்
மூவரும் இணைந்து இருந்தால்!
பகைவரின் கால்கள் தமிழ்மண்ணில்
பட்டிருக்குமா?
உலக தமிழர்களிடத்தில் ஒற்றுமை தான்
கெட்டிருக்குமா?

மேலும்

நிலாசூரியன் அளித்த கேள்வியில் (public) thilakavathy மற்றும் 19 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Jan-2014 12:29 pm

பொங்கல் திருவிழா கவிதை போட்டி
===============================

தோழமை நெஞ்சங்களே வணக்கம்...!

2012 ஆம் வருடம் புரட்சியாளர் சே குவேர பிறந்த தினத்தை முன்னிட்டு நமது தளத்தில் கவிதைபோட்டி போட்டி நடத்தி சிறப்பான படைப்பாளிகள் பலருக்கும் பண பரிசுகள் வழங்கி, அவர்களை கௌரவித்து மகிழ்ந்தோம்.

அதன் பிறகு 2013 கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டி நடத்தி, சிறப்பான படைப்பாளிகளை கௌரவித்து பரிசும் பட்டயமும் வழங்கினோம்.

அந்த வகையில் இது இரண்டாம் ஆண்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டிக்கான அறிவிப்பு.

அறிவிப்பு;

12 கோடி மக்கள் தொகையோடு உலகெங்கும் பறந்து விரிந்து கிட

மேலும்

பரிசு பெற்றவர்களுக்கும் பரிசுக்குரிய படைப்புகளை தேர்வு செய்தவர்களுக்கும் முன் நின்று நடத்தியவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 14-Feb-2014 11:47 am
நன்றிகள் தோழா 02-Feb-2014 2:10 am
நன்றிகள் தோழரே.. 02-Feb-2014 2:10 am
பரிசு பெற்றோர் சிறப்பாக பனியாற்றியொர் அனைவருக்கும் மிக்க நன்றிகள் . பாராட்டுக்கள் ,வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . 01-Feb-2014 6:54 pm
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) தாமரைச்செல்வன் மற்றும் 19 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Jan-2014 1:37 pm

சிந்திப்போம்
============

பட்டினியால் பலர் தவித்திருக்க
பசிக்குமேல் உண்ணுகிறாய்....
வாய் நனைக்க தண்ணீரில்லை
வயிறு நிறைந்தும் அருந்துகிறாய்....

எலும்பும் தோலுமாய் மெலிந்திருக்க
எலும்பிலும் நல்லெலும்பு தேடுகிறாய்....
மானம் காக்க ஆடை இல்லை அவருக்கு
மானங்காக்கா ஆடைகளை நாடுகின்றாய்....

காலில் செருப்பில்லை
சுடும் வெயிலில் குறைவில்லை
காரில் AC வேண்டும்
இங்கு சாலை மறியல் போராட்டம்…

சிறுதும் மழையில்லை
வறண்ட பூமி செழிக்கவில்லை
சினிமாவில் மழைக்கு வேண்டி
100 வண்டி குடி நீராம்…

சிந்திவிட்ட பதிர் சோற்றை
பசி தீர்க்க தேடுகின்றார்
சில்லென்று போனதென்று
குப்பைய

மேலும்

நன்றி ஐயா :) 10-Nov-2014 1:01 pm
சாப்பிடும் முன் நன்றி சொல்லி தெய்வத்தை வணங்கிடுவர் சிலர்.. ஆனால் அனைவருமே சிந்திக்க வேண்டியதை சொல்லும் கவிதை ..அருமை! 10-Nov-2014 12:53 pm
நன்றி தோழரே 28-Mar-2014 2:05 pm
"சிந்திப்பீர் உண்ணுமுன்னே இல்லாதோர் நிலைமையினை சிந்தனையில் நினைத்திடுவீர் நம்மை விட தாழ்ந்தவரை..." இல்லாதோர் நிலையை நினைவூட்டுகிரது உங்கள் வரிகளும், வலிகளும். 28-Mar-2014 12:50 pm
ஔவ்வைதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2014 11:12 am

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூற
என் ஆயுளை கூட்டி தந்த
கடவுளுக்கு என் நன்றி!

இதுவரை என்னுடைய நல்லது கெட்டது
அனைத்திலும் என் கூட உற்ற துனையாக,
நண்பனாக இருந்த காலத்திற்க்கு என் நன்றி!

எனக்காக பிறந்த இந்த புத்தாண்டில்
எனக்கு செய்த தீமைகளை மறந்து
நன்மைகளை நினைவூட்ட என் நினைவுகளுக்கு
என் முன்கூட்டிய நன்றி!

இந்த உலகை, காலத்தை, நினைவுகளை
எனக்கு தந்த என்
அம்மாவுக்கு முதற்கண் நன்றி!

மேலும்

எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 02-Jan-2014 11:14 am
புத்தாண்டில்... புரையோடிய நம் தமிழ் இனம் புத்துணர்ச்சி பொங்கட்டும்..! புதுமைகள் பூக்கட்டும்.. புது உலகம் பிறக்கட்டும்.. புன்னகை பூவுடன்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்..! நட்புடன் குமரி. 01-Jan-2014 6:34 pm
இந்த உலகை, காலத்தை, நினைவுகளை எனக்கு தந்த என் அம்மாவுக்கு முதற்கண் நன்றி! இதுதான் அருமையான் உண்மை வாழ்த்து வரிகள் . புத்தாண்டு வாழ்த்துக்கள் 01-Jan-2014 3:03 pm
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !! 01-Jan-2014 2:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (111)

user photo

k.nishanthini

k.nishanthini

chennai
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (111)

krishnan hari

krishnan hari

chennai
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு
samu

samu

krishnagiri

இவரை பின்தொடர்பவர்கள் (111)

சிபு

சிபு

சென்னை
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
மேலே