மீண்டும் வானம்பாடி

தடித்த அலகு அழகு - பழுப்பு
நிற உடல் அழகு - கரிய
அடிப்பகுதியும் வெண் நிற கன்ன அழகு
இணை யாகவோ கூட்டமாகவோ திறந்த
வயல்வெளிகளில் நீ காணப்படுவதும் அழகு
மண்ணின் நிறத்திலேயே இருப்பதால் – உன்னை
கண்டுபிடிப்பது சற்றே கடினம் - என்றாலும்
இறக் கைகளை அடித்தபடி நடுங்கும்
இயக்கத்துடன் சட்டென விண்ணை நோக்கிஎழும்பி
உயர்வானில் நீபாடிக்கொண்டே இருப்பாய் – நான்
இசைவானில் உன்னை தேடிக்கொண்டே இருப்பேன்
பின்பு இறக்கைகளைப் பக்கவாட்டில் குறுக்கி
திடுமென கீழ் நோக்கி வீழ்ந்து
மீண்டும் வீழ்ந்த வேகத்திலேயே
மேல் நோக்கி எழுந்து - மீண்டும்
பாடிக் கொண்டே கலிநடனம் தந்தாயே!!

எழுதியவர் : ஔவைதாசன் (6-Jul-14, 12:34 pm)
Tanglish : meendum vaanampaadi
பார்வை : 101

மேலே