எனக்கான பிரபஞ்சம்

எனக்கான பிரபஞ்சம்
நீண்டுகிடக்கிறது கண்முன்;
இருள் சூழவுமில்லை,
ஒளிச்செறிவுமில்லை;

முடிவுறாதெனினும்,
நடந்துக்கொண்டேயிருக்கிறேன்
வெறும் கால்களால்;

ஏதும் சிக்காதெனினும்,
துழாவிக்கொண்டேயிருக்கிறேன்
வெற்றுகைகளால்.....

நீரும் இல்லை;
காற்றுமில்லை-ஆனால்
மிதந்து கொண்டிருக்கிறேன்;
உன் ஞாபகச்சிறகுகளை
பொருத்திக்கொண்டு;

பசியுமில்லை;
வலியுமில்லை-ஆனால்
வளர்ந்து கொண்டேருக்கிறது
வேறுஒரு பிரபஞ்சம்
காணும் ஆசை மட்டும்

விளிம்பு வரையேனும் போய்,
அடுத்த பிரபஞ்சம் ஒன்று
இருப்பதை உறுதிசெய்யுமுன்
விழிப்பு வந்துவிடுகிறது;
என்ன செய்ய..

எழுதியவர் : பசப்பி (5-Jul-14, 9:48 am)
பார்வை : 125

மேலே