தமிழ் இஸ்லாமியர்கள் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை

சகோதரர் மலர்1991 அவர்கள் நல்ல ஒரு விண்ணப்பத்தை கேள்வி பதில்பகுதியில் முன் வைத்தார்கள். பலர் மழுப்பலாக பதில் சொன்னாலும் யாரும் உண்மையை மனம் திறத்து சொல்ல முன்வரவில்லை. அதனால் நானே இதை இங்கு மீள் பதிவு செய்கிறேன்.

இது சம்பந்தமாக சில விஷயங்களை இங்கு நான் முன் வைக்க விரும்புகிறேன்.அவைகளை வைத்து தமிழுக்கோ தமிழர்களுக்கோ நான் எதிரி என நீங்கள் முடிவு கட்டிவிடக் கூடாது.

ஒரு கலாச்சார விழா நமது நாட்டில் தொடர்ந்து நடை பெற்று வருகிறது என்ற காரணத்திற்காக அதைச் செய்யும்படி எவரையும் வற்புறுத்த முடியாது. பொங்கல் விழாவை பொறுத்தமட்டில், தானியம் விழைந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக அவ்விழா கொண்டாடப்படுகிறது என்றுதான் பொதுவாக கூறப்படுகிறது.

அறுவடை செய்பவர்கள் தங்கள் தானியம் தமது வீட்டிற்கு வந்தடையும் வேளை மகிழ்ச்சியில் மூழ்குவது இயல்பே! இவர்கள் கொண்டாடினால் அதற்கு அர்த்தம் உண்டு. ஆனால் இதற்கு சம்பந்தம் இல்லாதவர்களால் இது கொண்டாடப்படுகிறது.

தானியத்தைப் பற்றி எதுவுமறியாத, விவசாயத்தைப் பற்றி எந்தக் கவலையுமற்ற சென்னைவாசிகள் ஆந்திர விவசாயிகளின் அரிசியை வாங்கி உண்ணுகின்றனர். உண்ணும் இவர்களைக் கொண்டாடுமாறு கேட்டு இவர்கள் கொண்டாடினால் அது இயல்பான கொண்டாட்டமாக இருக்காது.

இரண்டவது, எந்த நேரத்திலும் மனிதன் பகுத்தறிவை இழந்து விடக்கூடாது என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய விதிகளில் ஒன்று. எந்த நிலையிலும் மனிதனை விட மேம்பட்டதாக எப்பொருளையும் நினைக்கக் கூடாது. ஆடு, மாடு போன்ற மிருகங்களை விட எல்லா வகையிலும் மனிதன் உயர்ந்தவன் என்பது இஸ்லாத்தின் கொள்கை. இந்த அடிப்படை விதிகளுடன் பொங்கல் விழாவை நோக்கும்போது அதிக முரண்பாடுகளை அங்கே காண முடியும்.

மாடுதான் எல்லாவற்றையும் தந்தது என நம்பி கொண்டு அதற்கு நன்றி செலுத்துகிறோம் என்ற பெயரில் மாட்டுப் பொங்கல் என்ற ஒரு வழிபாட்டைச் செய்கிறார்கள். அப்படி ஒரு கலாச்சாரத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட உண்மை நிலை அதுதான். மாட்டைக் கூம்பிடுகிறார்கள். அதற்கு வழிபாடு செய்கிறார்கள்.

மனிதனுக்கு ஏற்ற வகையில் தானாக இயங்கும் சிந்தனை மாட்டுக்கு கிடையாது. அதை எதற்கு நாம் பயன்படுத்துகிறோமோ அதை அது செய்யும் உழுதல், குத்துதல், சண்டையிடுதல் போன்ற வேலைகளுக்கு பழக்கப்படுத்தி நாமே அதைப் பயன்படுத்துகிறோம். நாம் அதைப் பயன்படுத்தி விவசாயம் செய்திருக்க அதற்கு பூஜை வழிபாடு எதற்கு? இதைச் செய்ய முற்படுகின்ற போது கடவுள் வழிபாடு போன்ற ஒரு தோற்றம் உண்டாகி விடுகிறது.

தம் கரங்களால் செய்த ஒரு பொருளான பானைக்கும் பூஜை செய்கிறார்கள். அதற்கு சில கோலங்கள் இட்டதும் புனிதத் தன்மை வந்துவிட்டதாக மக்கள் நினக்கிறார்கள். மாட்டுக்கும் கோலம் போட்டு கடவுளாக ஆக்கியது போல் இதுவும் அமைந்து விடுகிறது. இப்போது இஸ்லாத்திற்கு நேர் எதிர் மாறான கொள்கை செயற்பாடுகள் வந்து நுழைந்து விட்டன.ஒரு காலத்தில் தானியங்கள் வீட்டுக்கு வந்து சேருகின்ற மகிழ்ச்சியை மட்டும் பிரதிபலிக்கின்ற விழாவாக இந்தப் பொங்கல் விழா இருந்திருக்கலாம். அந்த பழைய நிலமைக்கு இந்த பொங்கல் விழாவை நீங்கள் கொண்டு வாருங்கள் ஆட்சேபனை இன்றி எல்லோரும் கொண்டாடுவோம்.

கும்பிடக்கூடிய. பலதெய்வ வணக்கங்களை உண்டாக்கக்கூடிய விதத்தில் இந்த விழாக்கள் செல்லும்போது அதிலிருந்து ஒதுங்கி விடுமாறு இஸ்லாம் எம்மைப் பணிக்கிறது. நாம் தவிர்த்துக் கொள்ள காரணம் இதுவே தவிர காழ்ப்புணர்ச்சியல்ல...

தொப்புள் கொடி உறவுகளான அன்பு மாற்று மத சகோதரர்களே !நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறோன் .... பொங்கல் வாழ்த்து சொன்னவர்கள் மட்டுமே உங்கள் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் என்று இல்லை மாறாக சொல்லாத அனைத்து இஸ்லாமியர்களும் உங்கள் சகோதரர்களே !
இதனை உணர்த்தத்தான் இந்த பதிவு.

அடுத்து தமிழ் புத்தாண்டு தினம் என்று சொல்லவும் முடியவில்லை. காரணம் தமிழக அரசே தமிழ் புத்தாண்டு தினத்தை 'சித்திரை' என்றும் 'தை' என்றும் மாறி மாறி கொண்டாடி கொண்டு இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

-நன்றி.

எழுதியவர் : (15-Jan-14, 3:27 pm)
பார்வை : 1082

மேலே