காற்று - நாகூர் கவி
காற்றே...
உன் வருகைக் கண்டு
மரக்கிளைகள் நடனமாடும்...!
தனை மறந்து
செடிக்கொடிகளெல்லாம்
நயமாய் தலையாட்டும்...!
புல்லாங்குழலுக்கு
நீதானே
புதுக்கவிதை...!
குழந்தைகள் கையில்
கொஞ்சி விளையாடும்
பலூனும் நீதான்...!
வெற்றுத்தாளையும்
வானுயரப் பறக்கும் பட்டமாய்
மாற்றுவதும் நீதான்..!
சிமிலிக்குள்ளே
ஒளிந்திருக்கும்
முரட்டுக்கார நெருப்புக்கூட
உன்னைக் கண்டு நடுநடுங்கும்...!
நீயின்றி ஏது
மின்சாரம்...?
நீதானே அதற்கு
சம்சாரம்...!
காதலர்கள் மயக்கம்கொள்ள
அழகிய தென்றலாய் வருவாய்...
கட்டுக்கடங்கா வீரன் நீயென்று
உலகெல்லாம் பறைசாற்றிட
புயலாக நீ அவதரிப்பாய்...!
உன் மார்பில் முட்டி
முறிந்த மரங்கள்
கோடி கோடி...!
உன் சகவாசமின்றி
இறந்த மனித உடல்கள்
பல கோடி கோடி...!
மனங்கொண்டு
மனிதனோடு
மணம்வீச நீ இல்லையென்றால்
மறுநொடியே
மன்னனாயினும்
பிணம்தான்...!