பாரதி k - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாரதி k |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 02-May-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 194 |
புள்ளி | : 17 |
ஒரு பிரிவு இவ்வளவு
இன்பம் பயக்கும் என்றால்
இதழ்கள் பிரிந்தே இருக்கட்டும்..!
ஒரு பிரிவு இவ்வளவு
தெளிந்த சிந்தனை தருமென்றால்
இமைகள் என்றும் பிரிந்தே இருக்கட்டும்..!
ஒரு பிரிவு இவ்வளவு
உண்மையை கற்றுத்தருமென்றால்
இதயங்களும் கூட பிரிந்திருக்கட்டும்..!
ஒரு பிரிவு இவ்வளவு
ரகசியத்தை தெரிவிக்குமென்றால்
செவிகளிரண்டும் பிரிந்தே இருக்கட்டும்..!
ஒரு பிரிவு இவ்வளவு
பாதிப்பை தடுக்குமென்றால்
உறவுகளும் சற்று பிரிந்தே செல்லட்டும்..!
ஒரு பிரிவு இவ்வளவு
பெரிய சந்தோஷத்தை தருமெனில்
கருப்பையிலிருந்து சேய் பிரிந்து வாழட்டும்..!
ஒரு பிரிவு இவ்வளவு
க
மனதிற்குப் பிடித்தவரை
மணாளனாய் வரிந்திட்டேன்
மனதார சம்மதித்து
மகளென்னை வாழ்த்திடுவாய் !
இருமனமும் கலந்தபின்னே
இணைத்துவைத்தல் முறைதானே !
இடையூறாய் நீயிருந்தால்
இதயம்நூறாய் வெடித்திடுமே !
தாயேயுன் சம்மதத்தை
தயவுடனே வேண்டுகின்றேன்
தயங்குவதேன் கலங்குவதேன்
தடுப்பதெது சொல்லம்மா !
களங்கமில்லா காதல்தான்
கட்டுப்பாடு மீறலையே
கடலளவு கண்ணீர்விட்டும்
கல்மனமும் கரையலையே !
சாதிவெறி கொண்டவுள்ளம்
சம்மதிக்க மறுக்கிறதோ ?
சாகும்வரை போராடுவேன் - நீ
சரிசொலாமல் மணமுடியேன் !
சாதிக்குள்ளே மணம்செய்தால்
சாகாவரம் கிடைத்திடுமோ ?
சந்தோசம் நிலைத்திடுமோ ?
சால்பெனக்குத் தந்திடுமோ ?
விளை நிலங்கள் எல்லாம்
விலை நிலங்களாக
விலை நிலங்கள் எல்லாம்
வீட்டு மனைகளாக
விவசாயின் நிலையோ
வானம் பார்த்த
பூமியின் நிலைதான் ...
ஈரம் மிக்க இதயங்கள்
இம் மண்ணின்
மழைத்துளிகள் ....
மழைத்துளிகள் எல்லாம்
ஒன்றாக சேர்ந்தே
பெரும் வெள்ளக்காடானால்
உழவர்கள் எல்லாம்
உயர்ந்தவர்கள் ஆவாரே ...
தேனும் தினைமாவும்
கூழும் களியும்
உண்டுகளித்து
வயல் வரப்புகளில்
தெம்மாங்கு பண் இசைத்து
தெவிட்டாத வாழ்வுதனை
தெளிவுடன் வாழ்வோம் .......
உண்டி சுருங்காமல்
உவப்புடன் வாழ
சொல்லை செயலாக்க
திட்டமிட்டு
உறவுக்கு கைக்கொடுத்து
உழவுக்கு குரல் கொடுப்போம் ...........
ஆறுகள் காய்ந்துவிட்டது பாப்பா
மணல் மேடுகள்
மாயமாய் மறைந்ததுவே பாப்பா..!!
காடுகள் காணவில்லை பாப்பா
கொஞ்சி விளையாடிய
மிருகங்களும் மாய்ந்ததுவே பாப்பா..!!
ஏரிகளை இழந்துவிட்டோம் பாப்பா
அலை ஓடிய
நீரெல்லாம் கானலானதுவே பாப்பா..!!
குளங்கள் குப்பையானது பாப்பா
அடி நிலம்
தண்ணீரின்றி தரிசானதுவே பாப்பா..!!
மலைவளம் குறைந்ததுவிட்டது பாப்பா
மேகம் தடுத்து
மழைதராமல் உடைந்துவிட்டது பாப்பா..!!
விதைகளை உடைத்துவிட்டோம் பாப்பா
மரபுவழி செய்தியெல்லாம்
கூண்டோடு அழித்துவிட்டோம் பாப்பா..!!
மண்ணையும் மலடாக்கினொம் பாப்பா
உரம் என்னும்
நஞ்சுதன்னை கொட்டிவைத்தோம் பாப்பா..!!
மண்புழு அழிந்துவிட்