பிரிவு நன்று தான்

ஒரு பிரிவு இவ்வளவு
இன்பம் பயக்கும் என்றால்
இதழ்கள் பிரிந்தே இருக்கட்டும்..!
ஒரு பிரிவு இவ்வளவு
தெளிந்த சிந்தனை தருமென்றால்
இமைகள் என்றும் பிரிந்தே இருக்கட்டும்..!
ஒரு பிரிவு இவ்வளவு
உண்மையை கற்றுத்தருமென்றால்
இதயங்களும் கூட பிரிந்திருக்கட்டும்..!
ஒரு பிரிவு இவ்வளவு
ரகசியத்தை தெரிவிக்குமென்றால்
செவிகளிரண்டும் பிரிந்தே இருக்கட்டும்..!
ஒரு பிரிவு இவ்வளவு
பாதிப்பை தடுக்குமென்றால்
உறவுகளும் சற்று பிரிந்தே செல்லட்டும்..!
ஒரு பிரிவு இவ்வளவு
பெரிய சந்தோஷத்தை தருமெனில்
கருப்பையிலிருந்து சேய் பிரிந்து வாழட்டும்..!
ஒரு பிரிவு இவ்வளவு
காயங்களையும் மறக்கச் செய்யுமெனில்
நினைவுகளும் அழிந்தே போகட்டும்...!