தனிமை கொடுமை
நமக்குள்
நாம் காதல் மறித்துப்
போனபிறகு.....
எனக்கு அந்த காட்டு
வழிப்பயணம்.....
எனக்குள் கடலே இல்லை...ஆனாலும்
எண்ண அலைகளில் சிக்கித் தவித்தேன்...
உயர்ந்து நின்ற தைல மரங்கள்
உரக்கமாய் சிரித்தன....
மா மரங்கள் வெள்ளை நிற
எச்சிலை காறி உமிழ்ந்தன...
குறுக்கே ஒடிச் சென்ற
குட்டி அணில் கூட
குனிந்து சிரித்தது....
தணிமையில் நடக்கையில்
தவிப்புகள் பார்த்தாயா...?
நீ எனக்குள் சாகவேயில்லை
என எப்படி
புரிய வைப்பேன்....?
இறந்துக் கொண்டே நடந்தேன்....