அனாதை குழந்தை
![](https://eluthu.com/images/loading.gif)
உங்களின் அல்ப சுகத்திற்காக
என்னை அனாதை ஆக்கிவிட்டீர்களே.
என் பிறப்பின் ரகசியம் தெரியாமலே
நானும் வாழ்கிறேன்.
தைரியம் இல்லா கோழைகள் நீங்கள்.
கருணை உள்ளவர்களின் தயவால்
என் வாழ்க்கையும் நகர்கிறது.
இருந்தும் என் வாழ்க்கை
அர்த்தமற்றதாக போகிறதே.
தாய்மை என்பது புனிதமானது
அதை கொச்சைப் படுத்தி விட்டீர்களே.
மனதில் ஒரு ஆறாத வடுவுடன்
நாங்கள் வாழ வேண்டியதாகிறது
ஆண்டவனிடம் முறையிட்டு என்ன பயன்
இனி அவன் தான் என்ன பண்ண முடியும்.
நடப்பது நடக்கட்டும் என்று விதியை
நொந்து கொள்வதை தவிர.