நான் காகம்
கறுப்பானவன் தௌிவானவன்
கலையானவன் உனக்கானவன்!
கடமை புரிந்தவன் - உனக்காய்
காலை உணர்த்துபவன்!
உதயம் தெரிந்தவன் - நல்ல
உள்ளம் உள்ளவன்!
உடலழகுள்ளவன் - எனினும்
உன் அழுக்கை உண்பவன்!
தூய்மை தெரிந்தவன் - அகத்
தூய்மை உள்ளவன்!
துணையை அழைப்பவன் - அவர்
துன்பம் அறிந்தவன்!
கூடி உண்பவன் - என்றும்
கரைந்து அழைப்பவன்!
கிளையில் அமர்பவன் - உலகோர்
கதைகள் சொல்பவன்!
ஒற்றுமை தெரிந்தவன் - துணைக்காய் ஓசை இடுபவன்!
ஒன்று படுபவன் - தம்மில்
ஒருமை அறியாதவன்!
இழி சொற்குரியவன் - நீயிர்
இழிவாய் நினைப்பவன்!
இகழ்வை மறுப்பவன் - உங்கள்
இனிமைக்குறியவன்!
பழமொழிக்குரியவன் - என்றும்
பொன் குஞ்சானவன்!
படைப்பில் சிறந்தவன் - இறை
பணிவில் நிறைவானவன்!