நீயும் ஒரு அப்பனாடா

நீயும் ஒரு அப்பனாடா?

பிஞ்சவனை பக்கம் வைத்து
நஞ்சதனைக் குடிப்பவனே!
பஞ்சமாப் பாவியடா
கொஞ்சங்கூட அறிவில்லையா?

வழி காட்டுந்தந்தையா நீ
பழி பாவம் செய்யுறயே!
குழி உனக்கு வெட்டுறயே!
அழியத் துணை ஆக்குறயே!

படிக்க வச்சு அழகு பாத்தா
கிடக்க வச்சுக் கடன் முடிப்பான்.
குடிக்க வச்சுக் குடி கெடுத்தா
முடுக்கி உன்ன அடி கொடுப்பான்.

நீயும் ஒரு அப்பனாடா?
நெஞ்சம் புண்ணாகுதடா!
பேயனா பெற்றவனா?
பிள்ளையுனக்கு எதுக்கடா?

வாயில் வரும் வசவுகளை
வழிமறிக்க முடியலடா!
நாசமா நீ போவயடா !
நாளை இல்லை நாதியடா!

உன்னைப்போன்ற அப்பன்களை
ஒன்னாக்கூட்டிக் கொன்னாலே
பின்னால் வரும் சந்ததிகள்
தன் வழியில் வாழுமடா!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (10-Feb-14, 1:27 pm)
பார்வை : 123

மேலே