நிலா

வானில் மிதப்பது
பொன்நிலா
பூமியில்
தவழ்வது
பெண்ணிலா
உன்னை நோக்கும்
கண்ணிலா
வெண்மை இதயத்தை
திருடும் வெண்ணிலா
வீதி உலா விண்ணிலா
நம் காதல் நிலா
கையிலா
எடுப்பேன் உன்னை
மனதிலா
இல்லை
மாலை சூட்டுவேன்
படந்த மேனியிலா
கையோடு
கைசேர்க்க வந்த நிலா
என் கன்னத்திலே
முத்தங்கள் இட்ட நிலா
முடிபோட்டு
பந்தமாக வந்த நிலா
உனக்கா
வாழும் இந்த பெண்ணிலா!

எழுதியவர் : (10-Feb-14, 12:17 pm)
சேர்த்தது : M.A.பாண்டி தேவர்
Tanglish : nila
பார்வை : 59

மேலே