உழவுக்கு குரல் கொடுப்போம்

விளை நிலங்கள் எல்லாம்
விலை நிலங்களாக
விலை நிலங்கள் எல்லாம்
வீட்டு மனைகளாக
விவசாயின் நிலையோ
வானம் பார்த்த
பூமியின் நிலைதான் ...
ஈரம் மிக்க இதயங்கள்
இம் மண்ணின்
மழைத்துளிகள் ....
மழைத்துளிகள் எல்லாம்
ஒன்றாக சேர்ந்தே
பெரும் வெள்ளக்காடானால்
உழவர்கள் எல்லாம்
உயர்ந்தவர்கள் ஆவாரே ...
தேனும் தினைமாவும்
கூழும் களியும்
உண்டுகளித்து
வயல் வரப்புகளில்
தெம்மாங்கு பண் இசைத்து
தெவிட்டாத வாழ்வுதனை
தெளிவுடன் வாழ்வோம் .......
உண்டி சுருங்காமல்
உவப்புடன் வாழ
சொல்லை செயலாக்க
திட்டமிட்டு
உறவுக்கு கைக்கொடுத்து
உழவுக்கு குரல் கொடுப்போம் ...........