@@@அந்த மூன்று நாட்கள் @@@

பிரசவ வலிப்பொறுக்க
மாதம் மாதம் நிகழும்
பயிற்சி வகுப்புக்கள்!!!

உயிர் போனாலும்
பரவாயில்லையென
உயிரும் உதாசினமாகும்
உணர்வின் தருணம்!!!

பக்குவத்துடன்
பழகிக்கொள்ள
வலுக்கட்டாயமாக
வந்துபோகும்
வளர்பிறை தேய்பிறை!!!

அழகாய் அளவாய்
ஆடும் கடலலையில்
அடிக்கடி வரும் சுனாமி!!!

வாழ்வில் சந்திக்கும்
வலிகளை பொறுக்க
பெண்மையை
வலுப்படுத்தும் வழி!!!

மகளென அம்மாவும்
கண்ணென கணவனிருந்தும்
வலி உரியவளுக்கேயென
கொப்பளிக்கும்
உணர்வின் உச்சம்!!!

( பெண்மையின் மென்மையையும் மேன்மையையும் உணரவே இங்கு இப்படைப்பு )

...கவியாழினிசரண்யா...

எழுதியவர் : கவியாழினிசரண்யா (26-Aug-13, 1:24 pm)
பார்வை : 429

மேலே