உயர்ந்த கோவில்..!

உள்ளம் என்கிற கோயிலிலே
உள்ளே இருப்பது கழிவுகளா..?
உண்மையை சொல்லு உளறாதே
உள்ளம் என்பது கோவிலடா..!
அம்மா அங்கே தெய்வமடா
அவள் இருக்கும் இடமே கருவறைடா..!
அப்பா சொல்லும் அறிவுரையே
அங்கே மந்திரம் ஓதுதடா..!
உதறி உண்மையை தள்ளாதே
உன்னுள்ளம் உயர்ந்த கோவிலடா..!
ஆசிரியரொன்று வந்து விட்டால்
அவர்தான் கோவிலில் பூசாரி..!
அர்ச்சனை பூக்கள் அவர் தருவார்
அதனை உள்ளே புதைதிடுவாய்..!
அடுத்தவன் வாழ்வை அசைபோட்டு
ஆகாயத்தில் பறக்காதே...!
காதல் பிசாசை அமர வைத்து
கடமைகள் செய்ய தவறாதே..!
உதறி உண்மையை தள்ளாதே
உன்னுள்ளம் உயர்ந்த கோவிலடா..!
மங்கை என்பவள் காமமென்று
மடமை எண்ணம் வளர்க்காதே..!
போதை புகையிலை பாக்கென்று
பொல்லாப்பை அங்கே விதைக்காதே..!
காணும் காட்சிகள் கண்மூடி
காதை மூடி செல்லாதே..!
நீயாய் வம்புக்கு போகாதே
நீதி நேர்மை கொல்லாதே..!
தங்க குவியல் எடுக்காதே
தானம் கொடுப்பார் தடுக்காதே..!
பகட்டு உலகில் கனவு கண்டு
பாதை மாறி நடக்காதே..!
அன்பு தேரை தெருவிலோட்டி
அனாதை கரங்களை பிடிதிடுவாய்..!
அன்பு தீபம் அணையாமல்
அடிக்கடி உன்னை தூண்டிடுவாய்..!
உன் உடல்தான் புண்ணிய பூமியடா..!
அதில் உள்ளம் உயர்ந்த கோவிலடா..!