அன்புடன் அநாதை இல்லம்
பெத்தெடுக்க வாய்ப்பில்லை
தத்தெடுக்க முடிவுசெய்து
அநாதை இல்லம் ஒன்றை
அன்புடனே நாடினோம் ............
நண்பரின் உதவியோடு
புது உறவுகளின் துணையோடு
விலாசம்தேடி விரைந்துசென்றோம்
விரைவிலே இடம் சேர்ந்தோம் .........
தொடர்புக்கு தூரமிருந்தும்
களைப்புகளை கண்டுகொள்ளாமல்
நீண்டநெடு பயணம் தொடர்ந்து
ஆவலோடு சென்றடைந்தோம் .............
அரசியல் பிரமுகரின்
பிறந்தநாள் அதுவாக
விருந்திற்கு காத்திருந்த
குழந்தைகள் பலரிருக்க ..........
பசித்த முகம் பழைய உடைகளோடு
காத்திருந்த குழந்தைகளின் கண்களில்
ஏக்கம் மட்டுமே
இயல்பாய் தெரிந்தது .........
சமைத்து வந்த உணவை எல்லாம்
சிக்கனமாய் பறிமாற
கிடைத்ததே பெரிதென்று
பிள்ளைகள் உண்டு முடித்துகளைய .........
நாங்கள் சென்ற விடயமாக
பெண்நபர் ஒருவரை சந்திக்க
கோபத்தோடு பதிலளித்தார்
துரத்துவதில் குறியாய் இருந்தார் .........
ஆசையோடு சென்ற நாங்கள்
ஏக்கத்தோடு வெறித்து பார்க்க
பலமுறை எடுத்து சொல்லியும்
மறுப்பதிலே குறியாய் இருந்தார் ..........
பால்முகங்கள் பலபார்க்க
பயணம் நெடு கடந்தபோதும்
இரக்கமில்லாத ஒரு பெண்ணால்
நாங்கள் நிம்மதி இழப்போடு திரும்பிவந்தோம் ......
நிச்சயமாய் கிடைக்குமென்ற
சாதனை பயணத்தில்
சோதனைதான் இறைவன் தந்தான்
எங்களை சொதிப்பதிலே குறியாய் இருந்தான் ........
முழு முதல் பயணத்தில்
முத்து கிடைக்குமென்ற
எங்களின் ஆவலுக்கு
ஏமாற்றம்தான் பரிசாய் ...........
சேவை நோக்கத்தில்
இல்லங்கள் இருக்குமென்ற எண்ணத்தில்
முழுவதுமாய் முழுக்கு போட்டது
அந்த பயணம் ...........
ஆம் , அங்கு வியாபார நோக்கமே
விண்ணை முட்டுகிறது
பொதுநல நோக்கமெல்லாம்
மண்ணோடு புதைக்கப்பட்டது ............
காசு பணம் பார்ப்பதற்கு
கணக்கு காட்டுகிறார்கள் குழந்தைகளை
எண்ணிக்கை அதிகமிருந்தால்
இவர்களுக்கு முதலிடமாம் ..........
பண்டிகை தீபாவளி பொங்கலென்றும்
பணக்கார மனிதர்களின் பிறந்த நாளென்றும்
அரசியல் பிரமுகர்களின் முக்கிய நாளன்றும்
வசூலாகும் பணமெல்லாம் வங்கியில் சேமிப்பாக ....
தத்தெடுக்க மனு செய்து
காத்திருக்க வேண்டுமாம்
வரிசையின் அடிப்படையில்
தத்துவாரிசு கிடைக்குமாம் .........
இருநூறு முன்னூறு
எண்ணிக்கைகள் நீண்டிருக்கு
எப்படி இத்தனை குழந்தைகள்
மொத்தமாய் இங்கிருக்கு ..........
வருகின்ற குழந்தைகளை
கேட்பவர்களுக்கு கொடுத்துவிட்டால்
இவர்களுடைய எண்ணிக்கையில்
எத்தனையோ குறையும் ஐய்ய........
சேவையாய் இருந்திருந்து
இன்று தொழிலாக மாறிவிட
ஏங்கிவரும் தம்பதிக்கு
குழந்தைகள் கிடைப்பதில்லை
ஏங்குகின்ற பிள்ளைகளுக்கும்
பெற்றோர்கள் அமைவதில்லை ...............
கருணை நிறைந்த இந்தசேவை
காசுக்காக தொழிலாய் மாற
எத்தனையோ பிள்ளைகளின்
வாழ்க்கையோ கேள்விக்குறி ............
ஒருசிலரின் சுயநலத்தால்
பலபிள்ளைகள் தவித்து வாட
எதுவரைக்கும் போய்முடியும்
இக்கொடுமையின் அவலங்கள் .............
சிறு குழந்தையின் வாழ்க்கையோ
அவலமாய் தொடருமோ
இருகரம் கூப்பி வேண்டுகிறேன்
தோழர்களே ஏதாவ்து செய்யுங்கள் ..........