நான் ஒரு பாரதி கண்ட புதுமை பெண்

இருட்டினில் தனியாக நடந்து வருகிறேன்
நான் ஒரு பெண்
இரவு வெகு நேரத்தில் நடந்து வருகிறேன்
நான் ஒரு பெண்
தெருவினில் யாருமே இல்லை என்னைத்தவிர
நான் ஒரு பெண்
தெரு விளக்கும் அணைந்திருக்கிறது
நாய்கள் குரல் ஓங்குகிறது பயத்தில்
நான் ஒரு பெண்
என் செருப்பு சத்தம் அலைபோதுகிறது தனிமையில்
நான் ஒரு பெண்
கொஞ்ச தூரம் நடந்து சென்றேன்
நடுவே தேனீர்க் கடையில் இருவர்
நான் ஒரு பெண்
முன்னாள் நான் செல்ல
என் நிழலையும்
தாண்டி வந்து
என்னை தீண்டிப்பார்த்தனர்
நான் ஒரு பெண்
அவர்கள் கன்னத்தின் மேல் என் விரல்கள் பதிய
அவர்கள் கையெடுத்து கன்னத்தில் வைத்தபடி செல்கின்றனர்
நான் ஒரு பாரதி கண்ட புதுமை பெண்.
நீங்களா எப்படி இது போல இருக்க போறீங்க என் அன்பான தோழிகளே ?