வாழ்த்துகிறேன் தோழியே
ஆனந்த கண்ணீர் மழை பொழிய,
கடமை முடித்த பெற்றோர் ஆசி தர.,
புதுமகளை புது வீடு வரவேற்க,
சுற்றம் கூடி நிற்க,
தேவர்கள் வாழ்த்துப் பாட,
அக்னி சாட்சியாய்....
அக்னி புத்திரனின் கைகோர்த்து
வாழ்கை கடலில் ஓர் பயணம்.,
முடிவில்லா பயணத்தில்..
அலைகள் என்னும் தடைகளை
கைகோர்த்த கைகள் சேர்ந்து நொறுக்க
எல்லையில்லா வாழ்வில் இன்பங்கள்
பல புடைசூள.....
பல நூறு ஆண்டுகள்
இன்பத்திலும் துன்பத்திலும்,
தோழியாக ,காதலியாக ,தாயாக.,
மணவாளனின் மறுஉருவாய்
சுற்றம் போற்றும் கண்ணகியாய்
பெற்ற உள்ளம் பெருமைப்பட
ஏற்ற உள்ளம் மணங்குளிர
ஒன்றாய் கரை சேர
தோழர்கள் சார்பில் என் வாழ்த்துக்கள்