எமதினிய நட்பே
...எமதினிய நட்பே.....
அன்புக்கு அட்சயபாத்திரமாய்,
ஆறுதலுக்கு ஆகாசவாணியாய்,
இன்றுவரை இனிய நட்பாய்,
ஈடு கொடுத்து பேணுபவனாய்,
உடைந்திட்ட போது உற்ற துணையாய்,
ஊற்றுநீர் போல் அன்பைச் சுரப்பவனாய்,
எதார்த்தத்தை மறைக்காமல் எளிமையானவனாய்,
ஏற்றங்கள் எனைச்சேர என்றும் ஏணியாய்,
ஐயங்கள் களைந்து அன்பில் ஐக்கியமானவனாய்,
ஒருமித்த எண்ணங்களில் ஒன்றுபட்ட நேசனாய்,
ஓவியமாய் மனதினில் நிரந்தரமானவனாய்,
ஔடதமாய் பிணி தீர்க்கும் ஆபத்பாந்தவனாய்.........
நட்புக்கு ஒரு நந்தவனமாய்,
சிந்தனையுள் சினேகிதனாய்,
என்றென்றும் நீடுழி வாழ வாழ்த்திடுகின்றேன்...
****************@@@@@@@***********************