கவியன்பர்கள்
எழுதுவது கடினம்
குறை கூறுவது எளிது.
மற்றவர்களை மதித்து
நடப்பது நன்று.
இல்லாவிடில்
வாளாவிருப்பது நயம்.
சாடுவதை
நேரே செய்யாமல்
சாடை மாடையாக
குறிப்பிடுவது
ஏளனம் தொக்கிநிற்க
கருத்துரைக் கூறுவது
நற்செயல் அல்ல
கவிதையும் எண்ணங்களும்
ஒன்றோடு ஒன்று கலந்த பின்
நகைப்புக்கு இடமாகும் போது
மனம் துணுக்குறுகிறது
கவியன்பர்கள் நினைவில்
கொள்ள வேண்டும்.

