துன்பம்
பசி கொண்ட வயிற்றுக்கு
பரிமாற உணவில்லை
சிறு பிள்ளை நான்
சிந்திக்காமல் நொந்து கொண்டேன்
அம்மாவை........
எனக்கொரு பிள்ளை
என்ற போதும் இதே நிலை
இன்று என் பிள்ளை பட்டினியாய் ........
இப்போது தான் புரிந்தது
அன்று நான் பட்ட துயரிலும்
என் தாய் பட்ட துயர்
எத்தனை கொடியதென்று......