எது புண்ணியம்
நீ துணிகளைத் துவைக்கும் பொழுது
உன் வியர்வையில் நனைந்து
புண்ணியம் தேடிக்கொண்டன
சோப்பு நுரைகள்..!
நீ நெல்மணிப் பயிர்களை நடும்பொழுது
உன் வியர்வையில் நனைந்து
புண்ணியம் தேடிக் கொண்டன
விதை மணிகள் ...!
நீ கருவாடுகளைக் காய வைக்கும் பொழுது
உன் வியர்வையில் நனைந்து
புண்ணியம் தேடிக் கொண்டன
உயிரற்ற மீன்கள் ...!
உன்னிடம் உன்னிலேயே கசிகின்ற பொழுது
உன் வியர்வையில் பாடம் கற்பித்து
புண்ணியம் தேடிக் கொண்டன
உப்பு முத்துக்கள்...!
வியர்வையில் நீ மூழ்கும் பொழுதும்
நதிபோல உன்னிடமிருந்து
கடல்வாழ்க்கையில் சேராமல்
புண்ணியம் நீ பெற வேண்டி
பிரிய மறுக்கின்றது துளிகள்...!
வேகமாக நீ விடும் மூச்சுக் காற்று
உன்னிடம் கற்றுக் கொள்கின்றது
வியர்வையிலும் உயிர் வாழ
பூமிக்கு பாரமாகாமல் மோட்சமாய்
உறைந்துவிடுகிறது உனக்குள்ளே...!