ஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு

வருவது வரட்டும் வாசலைத் திறந்திடு
வாழ்விலே எதையும் சந்திக்க துணிந்திடு
வாய்ப்புகள் வந்தால் வளர்ச்சியை நினைத்திடு-காலை
வாருவோர் வந்தால் கவனமாய் இருந்திடு....!

கோழையின் இருப்பிடம் உயிருடன் கல்லறை
கோபத்தின் இருப்பிடம் பாவத்தின் மாளிகை
குணமாய் இருந்திட்டால் கவலைகள் இல்லையே
குறிக்கோளை அடைந்திட்டால் குறையேதும் இல்லையே.....!

நம்பிக்கை தீபம் நெஞ்சினில் வையடா
நாளைய விடியல் ஆகலாம் பொய்யடா
இந்நொடி மட்டுமே இப்போது மெய்யடா
இனிதே உழைத்திட சேர்ப்போம் கையடா....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (6-Sep-13, 11:50 am)
பார்வை : 65

மேலே