போதையின் பாதை
இரவு 9:15 மணி
…
சென்னை கலைவாணர் அரங்கம் எதிரில் உள்ள ஏசி பார்.
விசாலமான சொகுசு இருக்கையில் அமுதன்…. அகலமான தொலைக்காட்சி திரையில்.. சச்சின் டெண்டுல்கர்…
பங்களாதேஷ்க்கு எதிரான ஆட்டத்தில் 50 ரன்கள் அடித்து மட்டையை உயர்த்தி மகிழ்ச்சியை காட்டிக் கொண்டிருந்த போது .. அமுதனின் செல்போன் பாடுகிறது “ வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு “
செல்போனில் பாலச்சந்திரனின் நம்பர் ..
“ எதுக்கு இவன் கூப்பிடுறான்.. . சொல்லுடா டாக்டர் பாலு ?
”அம்மு எங்கடா இருக்க ?“ எதிர்முனையில் பாலச்சந்திரன்
”சேப்பாக் ஸ்டேடியம் கிட்ட ஒரு பார்ல ஏண்டா? ”
”ம்ம்ம் தண்ணி அடிக்க போயிட்டியா.. திருந்த மாட்ட டா நீ ..ராஸ்கல் … ”
”சரிஈஈஈ திட்டாதே…. டா……… என்ன பண்ண … அவள மறக்க முடியல என் பீலிங் ஜாஸ்தி ஆகிடுச்சுடா……….. ஜஸ்ட் ஒரு பீர் டா .. வந்துடறேன்…”
”என்னமோ பண்ணி தொல ? வரும் போது கால் டாக்சி ல வா.. ”
{அமுதன், பாலச்சந்திரன் நல்ல வசதி படைத்தவர்கள், பள்ளியில் இருந்து நண்பர்கள். இருவரும் நன்கு படித்து , சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்க வந்தனர். 3 ஆண்டுகள் ஒழுங்காக படித்த அமுதன் 4வது வருடத்தில் அவனின் காதலி மாதவி, இவனின் புகைப்பழக்கத்தை கண்டிக்க ,அதுவே இருவருக்குள்ளும் கருத்து வேற்றுமை ……. பிரிந்துவிட்டார்கள்.
அப்புறம் என்ன மாதவியை மறக்க மது வை ருசித்தான். படிப்பு குடிமுழ்கி போச்சு .}
---
மணி 9:20
”தம்பி ஒரு ஸ்டராங் ---- பீர் .. சச்சின் 90 ரன்னுக்கு வந்த உடனே ஒரு ஸ்மால் கொண்டு வா … சரியா ”
பீர் வந்தது.. கூடவே சாப்பிட வேர்கடலை, வெள்ளரிபழம், சுண்டல் இன்னும் பல இத்யாதிகள்…
பீர் மட மடவென குடித்தான் (மது கல்லீரலுக்கு செல்கிறது. அசிட்டால்டிஹைடு, அசிட்டிக் ஆசிட், கார்பாக்ஸிலிக் ஆசிட் ஆகியன வேதியியல் மாற்றமடைந்து இரத்தத்தில் கலக்கிறது )
மணி 10:30
சச்சின் 86 ரன் ………… லெக் திசையில் அழகாக காலை நகர்த்தி பந்தை அடிக்க …அது எல்லை கோட்டை கடந்து 4 ரன்களாக ஆனது …
”ஹேஹே………. டேய் தம்பி …. கொண்டு வா கொண்டு வா … ”
”தல செஞ்சுரி போட்டா இன்னொரு ஸ்மால் .. ம்ம்ம் வேண்டாம்., லார்ஜ் கொண்டுவா… செமயா செலிப்ரேட் பண்ணிக்கிறேன் ”
அவன் இருக்கைக்கு முன் ஸ்மால் கட்டிங் மற்றும் சோடா…
கலக்கி குடித்தான் அமுதன் …. (அவனது தசை தன் கட்டுபாட்டை இழந்து கொண்டிருக்கிறது)
மணி : 11:02
சச்சின் 99 ரன் …………………. ஸ்கொயர் கட் அடித்து தனது 100 வது சதம் பூர்த்தி செய்து கிரிக்கெட்டின் வரலாற்று சாதனையை அடைகிறார்.
அமுதன் தன் இருக்கைக்கு மேல் எழுந்து ஆடுகிறான், பாடுகிறான் …..
”சச்சின் ச்ச்சின் … ஷ்ஷ்ஷ்ச்ச்ச்சின்……சல்ல்ல்ல்ச்ச்சின்ன் .. தல்ல்ல்ல்வா யூ கிகிகிரேர்ர்ட் ……” (மதுவின் போதை அவனின் மூளைக்குள் கிளர்ச்சியான மனநிலையை தூண்டுகிறது )
”தம்ம்ம்ப்ப்ப்ப்பி கொய்ய்ண்டு வ்வ்வாஆ …. ”
”அண்ணா வேண்டாம் நா…எத எதயோ காரணத்த வச்சி குடிக்காதீங்க ண்ணா……போதும்… உங்க நிலை சரி இல்ல “ – சர்வர்
”டேய்ய்ய்ய்…… தலவன் 100/100 அடிச்சுருக்க்றார்ர்… நான் 90 அடிக்க கூடடாதா.. என்ன? அண்ணன் பணம் தரமாட்டனு பயப்படுர்யா.. இண்டா வச்சிக்கோ .. மீதிய டீய்ப்ஷா நீயே வச்சிக்கோ. எனக்கு நீ அட்வைஸ்ஸ்ஸ் ,போடா,, ஆ...ஆ பொடியா”
லார்ஜ் வந்தது .. எதையும் கலக்காமா குடித்தான் (மூளையில் இருக்கும் உணரும் பகுதியான கார்டெக்ஸ் அவனை கட்டுபடுத்தும் திறனை இழக்கிறது )
மணி 11:29
தள்ளாடியே "பாரில்" இருந்து வெளியே வந்து, தான் வந்த பைக்கை எடுத்து பாலச்சந்திரன் மற்றும் அவன் தங்கிருக்கும் விடுதிக்கு புறப்பட்டான் …
மணி 11:41
அண்ணா சாலை………….தாறுமாறாக சென்றுகொண்டிருக்கிறான்….
(அவனின் உடல் செல்லிலுள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டரில் உள்ள காபா என்ற கெட்ட நியூரோ செயல் அதிகரிக்கிறது , குளுட்டோமைன் என்ற நல்ல நியூரோ குறைவாக செயல்பட , மூளை அதன் கட்டுப்பாட்டில் இல்லை)
போதையில் பாதை மாறி பயணிக்கிறது அவனின் வாழ்க்கை வண்டி
மணி 11:44
தேனாம்பேட்டை….. சாலை ஓரத்திலுள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை இறக்கி கொண்டிருந்த வாகனத்தின் பின்புறம் பயங்கர மோதல் சத்தம் .
--------------------
ரத்த வெள்ளத்தில் அமுதன்……..
தெளித்த அவனின் ரத்தம் டாஸ்மாக் என்ற எழுதிய பச்சை பலகையில்...
”குடி குடியை கெடுக்கும் “ ,
“குடி நாட்டுக்கு வீட்டுக்கும் கேடு ” என்ற கேடு கெட்ட வாசக்தோடு….
கதை முடிந்தது .. அமுதனின் கதை
-----------
**********இது எனது முதல் சிறுகதை முயற்சி.. பிழைகள், தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்
----------------------இரா.சந்தோஷ் குமார்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
