அன்றும் இன்றும்

அன்று கூடினோம் அன்போடு
நிலா சோறு சமைத்தோம்
சொந்தங்கள் வரிசையாக...!

இன்று பிரிந்தோம் அன்போடு
நிலா சோறு சமைகின்றோம்
தனிக் குடித்தனத்தில்...!

அன்று சேர்ந்தோம் அன்போடு
அனைவரிடமும் பரிமாறிக் கொண்டோம்
பண்டமாற்று முறையில் ....!

இன்று பிரிகின்றோம் அன்போடு
அனைவரிடமும் பரிமாறிக் கொள்கின்றோம்
வட்டி கடன்களாக .....!

அன்று கூடினோம் அன்போடு
கிணற்றுநீர் பருகினோம்
இலவசமாக....!

இன்று பிரிகின்றோம்
செயற்கை நீரைப் பருகி
செயற்கை அன்போடு ....!

அன்று எழுதினோம் அன்போடு
உணர்வுகளைப் பரிமாறிக்கொண்டோம்
கடிதங்களில் கையெழுத்து முத்தங்களோடு...!

இன்று எழுதுகிறோம் அன்போடு
கைவிரல்களில் கைபேசியில்
துட்டில்லா செய்திகளாக...!

அன்று கூடி மகிழ்ந்தோம் அன்போடு
திருவிழா விசேசங்களில்
நாள் கணக்காக மாசக் கணக்காக
சொந்தங்களோடு...!

இன்று கூடுகின்றோம் அன்போடு
திருவிழா விசேசங்களில்
மணிக்கணக்கில் நிமிடங்களில்
உறவினர் நண்பர்களோடு ....!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (7-Sep-13, 5:52 am)
Tanglish : anrum intrum
பார்வை : 319

மேலே