@@@கதம்பம் @@@

ஆனந்தம் குடிகொள்ள சிலநேரம்
ஆழ்ந்த துன்பத்தில் சிலநேரம்!
கனவுகளின் கற்பனையில் சிலநேரம்
கனவான நினைவின் தவிப்பில் சிலநேரம்!
அனைவரும் சூழ ஆரவாரமாய் சிலநேரம்
அமைதியில்ஆழ்ந்து யாருமற்ற தனிமை சிலநேரம்!
வெற்றியெனும் ரதத்தில் குதுகலமாய் சிலநேரம்
வெட்கி குனிந்தபடி தோல்வியில் சிலநேரம்!
நினைத்தது நிகழ கானல்நீராய் சிலநேரம்
நிகழ்ந்ததை நினைக்க முடியாமல் சிலநேரம்!
செல்லும் வாழ்க்கை பாதை வெளிச்சமாய் சிலநேரம்
செல்லவே முடியாமல் இருட்டாய் சிலநேரம்!
நினைத்தது நடக்க உள்ளபூரிப்பில் சிலநேரம்
நிகழ்ந்ததையே நினைவால் புலம்பி சிலநேரம்!
பார்ப்பவையெல்லாம் புனிதமாய் சிலநேரம்
பார்க்கவே முடியா அருவருப்பாய் சிலநேரம் !
நிமிர நேரமற்று பணிசுமையாய் சிலநேரம்
நிமிர்ந்தபடியே பணியே இல்லாமல் சிலநேரம்!
மனம் கவலையை காணாமலே சிலநேரம்
மனம் கவலையில் மூழ்கியே சிலநேரம் !
உள்ளம் ஊக்கப்படும் வார்த்தைகளே சிலநேரம்
உள்ளம் உதாசினப்படும் வார்த்தையாய் சிலநேரம்!
இன்பமும் துன்பமும் ஏற்றமும் இரக்கமும்
குழப்பமும் தெளிவும் இனிப்பும் கசப்பும்
கலந்த கதம்பமான மனித வாழ்வில்
மணம் இல்லையென ஏங்குவோர் பலர்
வண்ணம் பார்த்து மகிழ்வோடு வாழ்வோர் சிலர்!!!
...கவியாழினி...