+காற்றுக்கு நாளை காதுகுத்து!+
காற்றுக்கு நாளை காதுகுத்து!
அதில்
இடி மேளமும் உண்டு!
மழை தாளமும் உண்டு!
குயில் பாடலும் உண்டு!
மயில் ஆடலும் உண்டு!
காற்றுக்கு நாளை காதுகுத்து!
அதில்
வானவில் மாமனுக்கும் அழைப்பு உண்டு!
தெம்மாங்கு அத்தையின் பாட்டும் உண்டு!
படம்பிடிக்க மின்னல் அண்ணன் உண்டு!
சீர் எடுத்துக் சீக்கிரம் எல்லோரும் வாருங்களேன்!