துளிப்பாக்கள் - (ஷான்)

தும்மல்
ஸ்கேன் எடுக்க வேண்டும்
தனியார் மருத்துவமனை!!!
=================================

விரதம்
காக்கைக்கு விருந்து
அமாவாசை!!
=================================

ஊதுவத்தி ஏற்றி
பிச்சை எடுக்கிறான்
குடிகாரன்!!!
================================

அழகு சாதனங்களை
அகற்றிவிட்டது மருந்து புட்டிகள்
முதுமை!!!
===============================

காற்று கூட்டத்தின்
போராட்ட வன்முறை
சூறாவளி
===============================

மருத்துவருக்கு பணநெருக்கடி 
விக்கலுக்கும்
அறுவை சிகிச்சை
===============================

எழுதியவர் : சொ. சாந்தி (8-Sep-13, 1:43 pm)
பார்வை : 116

மேலே